60 நகரும் ரேஷன் கடைகள் : \அமைச்சர் தொடங்கி வைத்தார்
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் திருவில்லிபுத்தூர்- 12, சாத்தூர்- 11, திருச்சுழி-14, அருப்புக்கோட்டை-16, விருதுநகர்-4, இராஜபாளையம்-2, சிவகாசி-1 என மொத்தம் 60 கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நியாய விலைக் கடைகள் மற்றும் பகுதி நேர நியாய விலைக் கடைகள் இல்லாத கிராமப் பகுதிகளுக்கு ரேஷன் பொருட்கள் அனைத்தும் வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படும். இதற்காக 36 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன், சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், சார் ஆட்சியர் தினேஷ்குமார், மண்டல இணைப் பதிவாளர் திலீப்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டம்
பழனி:
பழனி கீரனூர் காவல் ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை வழக்கறிஞர்களை அவமரியாதையாக பேசியதாகக் கூறப்படுகிறது. அவரது நடவடிக்கையைக் கண்டித்து பழனியில் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.