நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர், பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் வினோத் (41). இன்றைய சூழலில் இடதுசாரிகளால் மட்டுமே பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாக்க முடியும். எங்கள் மாவட்டத்தில் 50 ஒப்பந்த ஊழியர்கள் உள்ளனர். மாநிலம் முழுவதும் சுமார் 1,500 ஊழியர்கள் உள்ளனர். எங்களுக்கு 18 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. பிஎஸ்என்எல் உள்கட்டமைப்புப் பணிகள் முழுவதும் அவுட்சோர்சிங் முறைக்குச் சென்றுவிட்டது. நிரந்தர ஊழியர்கள் விஆர்எஸ் அல்லது பணி ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டால், அவர்களின் வேலைப்பளுவும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீது சுமத்தப்படுகிறது என்றார்.