tamilnadu

img

கிராம சுகாதார செவிலியர்கள் போராட்டம்

கிராம சுகாதார செவிலியர்கள் போராட்டம்

கோவை, ஜூன் 30 – காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம சுகா தார செவிலியர் சங்கத்தினர் திங்களன்று கோவை மாவட்ட சுகாதார அலுவலகத்தில் பெரும் திரள் முறையீட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை சுகாதார நிலையங்களில் தற் காலிகப் பணியாளர்களைக் கொண்டு தடுப் பூசிப் பணிகளை மேற்கொள்வதை உடனடி யாகக் கைவிட வேண்டும். கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களில் தற்போது 40% காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணி யிடங்களை பயிற்சி முடித்து மூன்று ஆண்டு களாகப் பணியமர்த்தப்படாமல் உள்ள கிராம  சுகாதார செவிலியர் மாணவிகளைக் கொண்டு நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட் டது.  கோவை மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட் டத் தலைவர் ஆர். செல்வி தலைமை ஏற்றார். மாநிலச் செயலாளர் வி.ஜமுனா வரவேற் றார். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  மாவட்டத் தலைவர் ச. ஜெகநாதன், மாவட் டச் செயலாளர் டி. மலர்ச்செல்வி, அமைப்புச்  செயலாளர் ஏ. தங்கமணி, இந்திய வங்கி ஊழி யர் சம்மேளன மாவட்டச் செயலாளர் ஆர்.  மகேஸ்வரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  மாநில பொதுச் செயலாளர் ஏ. பிரகலதா நிறை வுரையாற்றினார். முடிவில், மாவட்டப் பொரு ளாளர் டி. தேவிகா நன்றி கூறினார்.