tamilnadu

img

சம்பளத்தை தானமாக வழங்கும் விஜய் தேவரகொண்டா

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா,”தான் நடித்திருக்கும் “குஷி” திரைப்படத்தின் சம்பளத்தில் கிடைக்கும் ரூ.1  கோடியை 100 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முடிவு செய்துள்ளேன்.இதற்காக  எனது சமூக வலைதள பக்கத்தில் அதற்  கான விண்ணப்பம் வைக்கப்படும். இந்த விண்ணப்பத்தின் மூலம் விண் ணப்பிப்பவர்களை தேர்வு செய்து இந்த  தொகை வழங்கப்படும். இதன் மூலம் பள்ளி கட்டணம், வாடகை உள்ளிட்ட வற்றை கட்ட இருப்பவர்களுக்கு மிகவும்  பயனுள்ளதாக இருக்கும்” என அவர் கூறியுள்ளார். இந்த அறி விப்புக்கு பாராட்டு குவிந்து வருகிறது.