tamilnadu

img

கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தல்

சென்னை, ஏப். 3 - கலாஷேத்ரா நுண்கலைக் கல்லூ ரியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி திங்களன்று (ஏப்.3) திருவான்மியூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில், பாலியல் வன்முறைக்கு எதிராக  கலாஷேத்ரா நிர்வாகம் உறுதியான  நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்தா மல், சுதந்திரமான விசாரணை நடப் பதற்கான சூழலை உருவாக்க வேண் டும்  எனவும் வலியுறுத்தப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் மாதர் சங்கத்தின் மாநில பொதுச்  செயலாளர் ஆர்.ராதிகா கூறியதா வது: கல்லூரிக்குள் கடந்த பல ஆண்டு களாக பாலியல் துன்புறுத்தல் நடை பெற்று வருகிறது. முன்னாள் மாணவி களும் புகார் அளித்துள்ளனர். தற்  போது பயிலும் மாணவிகள், 4 பேர்  மீது குற்றம் சாட்டி பலமுறை நிர்வாகத் திற்கு புகார் அளித்துள்ளனர். அதன் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை. தற்போது ஹரிபத்மனை  மட்டும் கைது செய்திருப்பது போது மானதல்ல. குற்றச்சாட்டுக்குள்ளான அனைவரையும் கைது செய்ய வேண்டும். பாலியல் குற்றவாளிகளை பாது காப்பதோடு, புகார் தெரிவித்துள்ள மாணவிகளை அச்சுறுத்தும் நிர்வா கத்தின் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும். கல்லூரி வளாகங்களில் புகார் எழும்போது, விடுமுறை அளித்து போராட்டங்களை ஒடுக்கு கின்றனர். எனவே, கல்லூரிக்கு அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறையை ரத்து செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் பாலியல் புகார்  வந்தால் தேசிய மகளிர் ஆணையம் உடனடியாக வந்து, மாவட்ட ஆட்சியர்,  அதிகாரிகளுடன் பேசுகிறது; தலையீடு  செய்கிறது. ஆனால், ஒன்றிய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கல்வி  நிறுவனம் என்பதற்காக கலாஷேத்ரா விவகாரத்தில் மகளிர் ஆணையம் முறையாக நடந்து கொள்ளவில்லை.  புகார் தெரிவித்த மாணவர்களை விசாரிக்காமல், நிர்வாகத்தையும், நிர்வாகம் குறிப்பிட்ட நபர்களை மட்டும் 3 மணி நேரம் ஆணையம் விசாரித்துள்ளது. ஒன்றிய அரசின்  நிர்பந்தத்தின் காரணமாக விசார ணையை திரும்ப பெற்றுக் கொள்வ தாக அறிவித்துள்ளதாக கருதுகி றோம். எனவே, தேசிய மகளிர் ஆணையமும் இந்த வழக்கை  தொடர்ந்து விசாரிக்க வேண்டும். மாநில மகளிர் ஆணையத்தின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். வழக்கு விசாரணையை கூர்ந்து கவனித்து வருகிறோம். தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை தொடர்கிறது. பாலியல் புகார் தெரிவிப்போருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். இதுகுறித்து சிறப்பு சட்ட மன்ற கூட்டத்தொடர் நடத்தி, குற்ற வாளிகளுக்கு கடுமையான தண்டனை  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் நேரடியாக சந்தித்து வலியுறுத்தி உள்ளோம். தமிழ்நாட்டில் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு, உழைக்கும் மக்களுக்கு அநீதிகள் இழைக்கப் படுகிறபோது, எத்தகைய அதிகார வர்க்கம் தலையிட்டாலும் அதை எதிர்த்து நிற்கக் கூடிய துணிச்சல் எங்களுக்குள்ளது. அது எங்கள் கடமை. இவ்வாறு ராதிகா கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க தென்சென்னை மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலா தலைமை தாங்கினார். வேளச்சேரி பகுதி செயலா ளர் சித்திரைசெல்வி, வாலிபர் சங்க மாநில துணைத் தலைவர் சரவண தமிழன், மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ஆனந்த், செயலாளர் பாரதி ஆகியோர் பேசினர்.