tamilnadu

img

வேலை நேரத்தை மாற்ற முயற்சிக்கும் மத்திய மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை, மே 10- சிஐடியு தொழிற்சங்கங்கள் சார்பில் 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்ற முயற்சிக்கும் மத்திய மோடி அரசை கண்டித்து வீடுகள் மற்றும் தொழிற் சங்க அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மதுரை மாநகர் சிஐடியு சார்பில் மாவட்ட குழு அலுவலகத்தில் 8 மணி நேர வேளை நேரத்தை 12மணி நேரமாக மாற்ற முயற்சிக்கும் மத்திய மோடி அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து மாவட்டச் செயலாளர் ஆர்.தெய்வ ராஜ் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் பகுதிகுழு செயலாளர் வை.ஸ்டா லின், தையல் தொழிலாளர் சங்க நிர்வாகி ராஜ மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டிஆர்இயு சார்பில் மதுரை கோட்ட பொதுச் செயலாளர் என். சங்கரநாராயணன் இல்லத்தின் முன் அவரது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் மதுரை அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க அலுவலகம் முன் மதுரை மண்டல பொதுச் செயலாளர் ஏ. கனகசுந்தர் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது சம்மேளன துணைத் தலை வர்கள் வீ. பிச்சை, ஜி. ராஜேந்திரன், மதுரை மண்ட லத் தலைவர் பி.எம். அழகர்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கைத்தறி நெசவாளர் சங்கம் கட்டுமான தொழி லாளர் சங்கம் மற்றும் போக்குவரத்து தொழிலா ளர் சங்கம் சார்பில் தத்தனேரி பாக்கியநாதபுரம் பகுதியில் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பா.பழனியம்மாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கைத்தறி, கட்டுமானம், போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.  கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஜெய் ஹிந்துபுரம் பகுதியில் மாவட்ட துணைத்தலைவர் எம்.பாலமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை புறநகர்
மதுரை புறநகர் மாவட்டம் சிஐடியு அலு வலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன், மாவட்ட நிர்வாகிகள் வி பிச்சைராஜன், கே. ஜீவானந்தம், பி.பொன்ராஜ் , வி. சீனிவாசன், ஆகியோர் கலந்து கொண்டனர். கள்ளந்திரியில் சிஐடியு மாவட்டத் தலைவர் செ.கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

கைது
ஒத்தக்கடையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் சிஐடியு மாவட்ட நிர்வாகி நல்.மூர்த்தி ஏ .கஜேந்திரன், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு தாலுகாச் செயலாளர் எம்.கலைச்செல்வன், தாலுகா குழு உறுப்பினர் ஆர்.மனோகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனைவரையும் ஒத்தக்கடை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பரங்குன்றத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகி பொன் கிருஷ்ணன், செ.ஆஞ்சி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மெட்டல் பவுடர் நிறுவனம், ஹை டெக்,ஏபிடி பார்சல் சர்வீஸ், மேலூர் சூப்பர் ரப்பர் நிறுவனம் என நிறுவனங்கள் முன்பும் தொழிலா ளர்கள் அவரவர் வீடுகள் முன் பும் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.

சிஐடியு கண்டனம் 
சிஐடியு மதுரை புறநகர் மாவட்ட குழு சார்பில் மாவட்டத் தலைவர் செ.கண்ணன், மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன் ஆகியோர், சங்கத்தின் சார்பில் யா.ஒத்தக்கடையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கைது செய்த காவல்துறையினரை வன்மையாக கண் டிக்கிறோம் என்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலா ளர் சங்கம் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைகள் முன்பு நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு கிளை செயலாளர் முனீஸ்வரன் தலைமை தாங்கினார். சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் திருமலை கண்டன உரையாற்றினார். ராஜ பாளையம் கிளை 1ல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கிளைச் செயலாளர் சன்னாசிதலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என். தேவா ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசி னார். ஆர்ப்பாட்டத்தில் கிளை பொருளாளர் முத்து ராஜ் மத்திய சங்க நிர்வாக குழு உறுப்பினர் பாண்டியராஜன் சிஐடியு நகர கன்வீனர் சுப்பிர மணியன் உட்பட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இரண்டில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு கிளை தலைவர் வீரராகவன் தலைமை தாங்கினார். சிபிஎம் நகரச் செயலாளர் மாரியப்பன் கண்டன உரையாற்றினார்.

கூட்டுறவு ஊழியர்கள் 
இராஜபாளையத்தில் க்யூ1066 ராஜபாளை யம் நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முனியாண்டி தலைமை தாங்கினார் கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் பி என் தேவா பேசி னார்.

வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு ஒன்றியம் காடனேரி கிரா மத்தில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி கண்டன உரையாற்றினார்.

;