tamilnadu

தலைமைச் செயலாளருடன் திரிபாதி சந்திப்பு

சென்னை, ஜூன் 28- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர் வாணைய இயக்குநர் திரிபாதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் நிதித்துறை செயலாளர் சண்முகத்தை சந்தித்துப் பேசினார். தமிழ்நாடு டிஜிபியாக உள்ள டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம், இந்த மாதத்தோடு முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த டிஜிபியாக, திரிபாதியை நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இந்த சூழலில், தலைமைச் செயலகத்திற்கு வந்த திரிபாதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு, 5 நிமிடங்கள் நீடித்தது. இதனைத் தொடர்ந்து, நிதித்துறைச் செய லாளர் சண்முகத்தையும், உள்துறை செய லாளர் நிரஞ்சன் மார்டியையும் திரிபாதி சந்தித்து பேசினார். அதன் பின்னர் முதல மைச்சரின் செயலாளர்களை, திரிபாதி சந்தித்து பேசினார்.