tamilnadu

img

அரசு ஊழியர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் தோழர் கே.ஆர்.சங்கரன் காலமானார்

மதுரை,நவ.27- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்முன்னாள் மாநில பொதுச் செயலாளரும் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான தோழர் கே. ஆர். சங்கரன் நவம்பர் 26 வெள்ளியன்று இரவுகாலமானார். தோழர் சங்கரன் திருச்சி பிஹெச்இஎல் மற்றும் ஐடிஐ ஆசிரியராக பணியாற்றினார். ஐடிஐ தொழில் பயிற்சி  பள்ளி அலுவலர்கள் சங்கத்தை உருவாக்கினார். 1984- ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை உருவாக்கியதில் பெரும் பங்காற்றினார். தொடர்ந்து அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடி வந்த நிலையில் 1988ஆம் ஆண்டு ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும் என்று நடைபெற்ற போராட்டத்தில் தோழர் எம். ஆர். அப்பன், கங்காதரன், என். எல்.  சீதரன் உள்ளிட்ட தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்ட போது சென்னையிலிருந்து அரசு ஊழியர்களை திரட்டி போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்துவதில் மிகப்பெரும் களப்பணியாற்றினார்.  கோவை மாவட்டத்தில் அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளன அகில இந்திய மாநாட்டை சிறப்பாக நடத்தி தோழர்கள் மத்தியில் மிகப்பெரும் பாராட்டைப்  பெற்றார்.

தன்னுடைய பணி ஓய்வுக்குப் பின்  தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவராக இருந்து ஓய்வூதியர்களுக்கான பிரச்சனைகள் குறித்த பல்வேறு போராட்டங்களில் முன்னின்றவர்.  உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று இரவு 7 மணிக்கு கால மானார். பாலாஜி நகர் விவேகானந்தர் தெருவில் உள்ள இல்லத்தில் தோழர் கே. ஆர். சங்கரன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  அன்னாரது  மறைவுச் செய்தி யறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலா ளர் மா. கணேசன் மாநிலக்குழு உறுப்பினர்கள் சி. ராம கிருஷ்ணன், இரா. விஜயராஜன் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் அன்பரசு, பொதுச் செயலாளர் ஆ. செல்வம் மாவட்ட தலைவர் ஜெ. மூர்த்தி, செயலாளர் க. நீதிராஜா, பொருளாளர் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர்கள் எஸ். சந்திரன், பி. ராமமூர்த்தி, எம். சுப்பிரமணியன் ,மாநிலப் பொருளாளர் என். ஜெயசந்திரன் மற்றும் பல்வேறு சங்கங்க ளின் நிர்வாகிகள் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

  பின்னர் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதி யர் சங்க மாவட்ட தலைவர் குரு தமிழரசு தலைமையில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்திப் பேசினர். இறுதி நிகழ்ச்சி சனிக்கிழ மையன்று பாலாஜி நகர் விவேகானந்தர் தெருவில் உள்ள தோழர் கே. ஆர். சங்கரன் இல்லத்தில் இருந்து நடைபெற்றது.  மறைந்த தோழர் சங்கரனுக்கு உஷா என்ற மனைவியும் முரளி என்ற மகனும்  சுபாஷினி என்ற மகளும் உள்ளனர். மருமகன் ராமகிருஷ்ணன், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகியாக உள்ளார்.

;