tamilnadu

img

போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

திருநெல்வேலி, ஜூலை 24- போக்குவரத்து தொழிலாளர் அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் நெல்லை வண்ணார்பேட்டை தாமிர பரணி டெப்போ  முன்பு அனைத்து சங்கங்கள் மற்றும் இணைக்கப் பட்டுள்ள கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போரா ட்டத்திற்கு தொமுச மாநில அமைப்பு செயலாளர் தர்மர் தலைமை  தாங்கி னார். போராட்டத்தில் சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலை யான், சிஐடியு மாநிலக்குழு உறுப்பி னர் பெருமாள், சி.ஐ.டி.யு நிர்வாகிகள் சி.மணி, ஏ.பாலசுப்ரமணியன், ஏஐடியுசி சார்பில் உலகநாதன், வெங்கடேசன், ஜெயகுமார், ஐஎன்டியூசி சார்பில் ராமசாமி, செல்வம், எச்.எம்.எஸ் சார்பில் சுப்பிரமணியன், மைக்கேல் ராஜ், மனோகரன், டிடிஎஸ் சார்பில் சந்தானம், முகமது மைதீன் ஆகியோர் பேசினர்.