சென்னை, பிப்.25 - போக்குவரத்து கழகங்கள் வழங்க வேண்டிய 5600 கோடி ரூபாய் நிலுவை யை கேட்டு வெள்ளியன்று (பிப்.25) தமிழ்நாடு முழுவதும் 7 மையங்களில் ஓய்வூதியர்கள் முற்றுகையில் ஈடுபட்ட னர். போக்குவரத்து கழகத்தில் 86 ஆயிரம் ஓய்வூதியர்களும், 12 ஆயிரம் குடும்ப ஓய்வூதியர்களும் உள்ளனர். இவர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். ஆனால், கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து அகவிலைப் படி உயர்த்தப்படவில்லை. இதன்படி, கடந்த 72 மாதத்தில் அகவிலைப்படி யாக சுமார் 1600 கோடி ரூபாய் வழங்கப் படவில்லை. 2020 மே மாதம் முதல் 2021 ஜூன் மாதம் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை. இதன் மதிப்பு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய். எனவே, 5600 கோடி ரூபாய் நிலுவைத் தொகை யை வழங்க கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர்கள், மின்வாரிய ஓய்வூதியர்களுக்கு தமிழக அரசு நேரடியாக ஓய்வூதியம் வழங்குகிறது. அதேபோன்று போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும், மருத்துவப் படியை 300 ரூபாயாக உயர்த்த வேண்டும், ஓய்வூதி யம், குடும்ப ஓய்வூதியத்தை குறைந்த பட்சம் 7850 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும்.
மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், குடும்ப பாது காப்பு நிதியாக 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பணிக் காலத்தில் வழங்க வேண்டிய விடுப்பு ஒப்படைப்புத் தொகையை உடனடி யாக வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த நிலுவைகளை தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள ஓய்வூதிய நம்பக அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தி யாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் எஸ்.கிருஷ்ணன், “நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத் தும் தமிழக அரசு, போக்குவரத்து ஓய்வூதி யர்களை ஓரவஞ்சனையோடு நடத்து கிறது. 9 மாத கால ஆட்சியில் ஓய்வூதி யர் பிரச்சனை தீர்க்கப்படவில்லை. அரசை எச்சரிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 25ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்” என்றார். இதனை தொடர்ந்து போக்கு வரத்து துறை செயலாளர் கே.கோபாலு டன் சங்கத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேசிய துறைச் செயலாளர், ஒப்பந்த பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளன. எனவே விரை வில் ஓய்வூதியர் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்துள் ளார்.
இதனையடுத்து போராட்டத்தில் பேசிய தலைவர்கள், பட்ஜெட் கூட்டத் தொடரின்போது ஓய்வூதியரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. எனவே, அரசை எச்சரி க்கும் வகையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தை விலக்கி கொள்வதாக அறிவித்தனர். இந்தப் போராட்டத்தில் அமைப்பின் பொதுச் செயலாளர் கே.கர்சன், பொருளாளர் ஏ.வரதராஜன், சென்னை மாவட்ட நிர்வாகிகள் வீரராகவன், முத்துக் குமார், நீலமேகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த முற்றுகைப் போராட்டம் மதுரை, கோவை, சேலம், கும்ப கோணம், நெல்லை, விழுப்புரம் ஆகிய போக்குவரத்து கழக நிர்வாக இயக்கு நர் அலுவலகங்கள் முன்பும் நடை பெற்றது.