திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரிக்கு திங்களன்று வந்த முதலாம் ஆண்டு மாணவர்களை, இந்திய மாணவர் சங்கத்தினர் பேனா கொடுத்து வரவேற்றனர். இந்நிகழ்வில், மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் விக்னேஷ், மாவட்டக் குழு உறுப்பினர் தமிழ்ச்சோலை, இமயவர்மன், மனோஜ், ஹரிஹரன், ராஜ்குமார், அரவிந்த், கார்த்திக், கதிரவன், தமிழ்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.