tamilnadu

img

புதுச்சேரியில் சீத்தாராம் யெச்சூரி

மக்கள் நலனைப் பாதுகாக்க, மாநில உரிமை மீட்பு அரசியல் சிறப்பு மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்புக்குழு சார்பில் கம்பன் கலையரங்கத்தில் நவம்பர் 13 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு வருகை தந்த கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், மூத்த தலைவர்கள்  சுதாசுந்தரராமன், தா.முருகன், வெ.பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.