பெர்டோல்ட் பிரெக்ட்
அது கடினமானதல்ல,
சட்டெனப் புரிந்து கொள்ளக்கூடிய
எளிமை உள்ளது அது.
நீ சுரண்டல்வாதியல்லன்
எனவே அதை நீ
எளிதில் புரிந்து கொள்ள முடியும்
அது உன் நன்மைக்கு வழி
எனவே அதைப் பற்றி புரிந்து கொள்.
அதனை மடமை என்போர் மடையர்
அது மோசம் என்போர் மோசடிக்காரர்
மோசடிகளுக்கு எதிரானது அது.
சுரண்டல்வாதிகள் அதனைக்
கிரிமினலானது என்பர்.
ஆனால் உண்மை விஷயம்
நமக்குத் தெரியும்.
கிரிமினலான யாவற்றையும்
அது முடிவு கட்டும்.
அது கிறுக்குத்தனமானதல்ல
கிறுக்குத் தனங்கள்
முழுவதுக்கும் முடிவு கட்டுவது அது.
அது குழப்பமல்ல, ஒழுங்கு.
எளிமையான விஷயம்தான்
செய்யக் கடினமானது.
தமிழில்: பிரமிள்
ஏகலைவன் முகநூல் பதிவிலிருந்து