tamilnadu

img

தூத்துக்குடி மற்றும் குலசேகரம் முக்கிய செய்திகள்

வெடிமருந்து விற்பனை கிடங்குகளில் ஆய்வு

தூத்துக்குடி, ஆக.14- தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை, சில்லாநத்தம் ஆகிய பகுதிகளில் கல் குவாரி மற்றும் கிணறு வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் வெடி மருந்து பொருட் கள் விற்பனை செய்யும் கிடங்குகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெள்ளியன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். வெடி மருந்து கிடங்கில் பராமரித்து வரும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். மேலும் அதன் உரிமையாளர்களிடம், வெடி மருந்து பொருட்கள் கல்குவாரி மற்றும் கிணறு வெட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், வரு வாய்த் துறையினரிடம் உரிய அனுமதி பெற்று, உரிய சான்றோடு வருபவர் களுக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண் டும் என்றும், அவ்வாறு வாங்க வருபவர் களிடம் அப்படியே கொடுத்து விடக் கூடாது, வெடிமருந்து விற்பனை கிடங்கின் பணியாளர்கள் சென்று, அவர்களுக்கு கல்குவாரிகள் மற்றும் கிணறுகளில் பாது காப்பு வழிமுறைகளை கடைபிடித்து வெடிக்க வைக்க வேண்டும். வெடி பொருட்களை பாதுகாப்பான முறையில் கிடங்கில் இருப்பு வைக்க வேண்டும். முன், பின் தெரியாதவர் களுக்கோ, சட்ட விரோத செயல்களில் ஈடு படுபவர்களுக்கோ விற்பனை செய்யக் கூடாது. வெடிமருந்து கிடங்குகளை முறையாக பராமரிக்க வேண்டும் உள் ளிட்டவை அறிவுறுத்தினார். 

டிஎம்சி சார்பில் 100 பேரிகார்டு வழங்கல்  

தூத்துக்குடி மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு, தமிழ்நாடு மெர்க்கன் டைல் வங்கியின் தூத்துக்குடி தலைமை அலுவலகம் சார்பில் 100 பேரிகார்டுகள் வழங்கும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரிடம், 100 பேரிகார்டுகளை வங்கி துணைப் பொது மேலாளர் சுரேந்திரன் ஒப்படைத்தார். 

ரேசன் பொருட்கள் தடையின்றி கிடைக்கக் கோரிக்கை  

திருநெல்வேலி, ஆக.14- நெல்லையில், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் கு. பழனி, செயலாளர் பி.கற்பகம் ஆகியோர் ஆட்சியர் ஷில்பாவிற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்ப தாவது, மாதர் சங்கம் சார்பாக திருநெல் வேலி மாவட்டத்தில் உள்ள மொத்த முள்ள எட்டு தாலுகாக்களில் ஆய்வு நடத் தப்பட்டது. எனவே ஊரடங்கு காலத்தில் மத்திய- மாநில அரசுகள் 100 சதமான பொருட்களை நியாய விலைகடை களுக்கு முழுமையாக வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.  நெல்லை மாவட்ட பகுதியிலுள்ள ரேசன்கடைகளில் பொருட்கள் அளவு குறைவாக வருவதால் மக்களுக்கு போய் சேரவில்லை. விநியோகம் செய்யும்  பொருட்களையும், இருப்பு உள்ள பொருட்களையும் தகவல் பலகையில் எழுதி மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். இதன் மூலம் கடத்தல், பதுக் கலை தடுத்து நிறுத்த முடியும். மேலும் அதே சமயத்தில் 21 வகையான அத்தியா வசிய பொருட்களையும், ரூ.ஆயிரம் குடும்ப செலவிற்கு வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆறு மாதங்களுக்கு வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது.

தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஆக.14- போக்குவரத்து கழகங்களை தனி யார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு போக்கு வரத்துதொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் வெள்ளியன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட நிர்வாகி சி.ஸ்டீபன் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே.தங்கமோகன், துணை தலைவர் எஸ்.அந்தோணி, மாவட்ட நிர்வாகிகள் எம்.லெட்சுமணன், எப்.எஸ்.ஏ.லியோ, பிரேம் ஆனந்த், பரம சிவன் ஆகியோர் பேசினர்.மோட்டார் தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஆசீர் உட்பட பலர் கலந்து கொண்ட னர். போக்குவரத்து கழகங்களுக்கு தனி யாரிடம் இருந்து வாகனங்களை வாட கைக்கு எடுத்து இயக்கப்போடப்பட்ட அரசு ஆணை எண் 261- யை வாபஸ் வாங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைள் ஆர்ப் பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

சுதந்திர தின விழா ஒத்திகை  

தூத்துக்குடி, ஆக.14- சுதந்திர தின விழாவையொட்டி தூத் துக்குடி தருவை மைதானத்தில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை யுடன் ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றி மரி யாதை செலுத்துகிறார். இதையொட்டி காவல்துறையின் அணிவகுப்பு மரியா தைக்கான ஒத்திகை வெள்ளியன்று நடை பெற்றது. அணிவகுப்பு ஒத்திகையை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

குறைந்தபட்ச சம்பளமில்லாமலே இரட்டை வேலை

டெங்கு காய்ச்சல் தடுப்பு ஊழியர்களின் அவல நிலை

குலசேகரம், ஆக.14- வழக்கமான டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி யுடன் கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைக ளிலும் ஈடுபடும் ஊழியர்கள் குறைந்தபட்ச சம்பள மும் போக்குவரத்து ஏற்பாடுகளும் இல்லாமல் அவ திப்படுகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 99 ஊராட்சி களிலும் 55 பேரூராட்சிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரு கிறார்கள். தற்போது இவர்கள் கூடுதலாக கொரோனா பரவலை தடுப்பதற்கான பணிகளையும் மேற்கொண் டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இவர்கள் குடியிருக்கும் இடத்திலிருந்து பணி செய்யும் பகுதிக்கு செல்ல பொது போக்கு வரத்து வசதியும் தற்போது இல்லை. குறைந்த பட்ச கூலிகூட இல்லாத நிலையில் இவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட உள்ளாட்சி ஊழியர் சங்க செயலாளர் எஸ்.சி.ஸ்டாலின்தாஸ் கூறு கையில், டெங்கு கொசு ஒழிப்பு பணியில் கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள ஊழியர்களில் 90 சதவிகி தம் பெண்கள். முன்பு இவர்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை வேலை நேரமும் ரூ.460 சம்பளமும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேலை நேரம் 9 முதல் 2 மணி வரை எனவும் சம்பளம் ரூ.265 எனவும் குறைக்கப் பட்டது. தற்போது இவர்களே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறார்கள். ஆனால், இதற்காக கூடுதல் தொகை எதையும் வழங்கு வதில்லை. வேலைப்பளுவும் பணியிடம் செல்ல கூடு தல் செலவும் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு பிஎப், இஎஸ்ஐ போன்ற எந்த ஏற்பாடுகளும் இல்லை. ஒரே பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்டோர் வேலை நாட்களை பகிர்ந்து கொண்டு அதற்கேற்ப சம்பளத்தையும் குறைத்து வாங்கும் அவ லநிலையும் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.615 நிர்ணயம் செய்து 14.7.2020 அன்று மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பித் துள்ளார். ஒரே நேரத்தில் உள்ளாட்சி அமைப்பிலும்,  சுகாதரத்துறையிலும் பணிகளை நிறைவேற்றும் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த குறைந்த பட்ச சம்பளமும் இதர சலுகைகளும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றார். அண்மையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நட வடிக்கை குறித்து சுகாதாரத்துறை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறைக்கு பல்வேறு அறிவுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், காய்ச்சல் முகாம்களில் கொரோனாவுடன், டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக அரசுக்கு தெரியப்படுத்தவும் சுகாதா ரத்துறை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் அறி வுறுத்தினார். இந்த பணிகளை மக்களிடம் நேரடி யாக மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ட சம்பளம் கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண் டும். சுகாதாரத்துறைக்கும் உள்ளாட்சித்துறைக்கும் சல்லி வேர்களான இந்த ஊழியர்களின் பங்கு முக்கியமானது.