tamilnadu

தேனி மற்றும் மதுரை முக்கிய செய்திகள்

இடுக்கி மாவட்டத்திற்கு ஏல விவசாயிகள்  இ-பாஸ் விண்ணப்பித்து செல்லலாம்  

சிபிஎம் தேனி மாவட்டச் செயலாளர் தகவல்

தேனி, ஜூலை 3- மார்க்சிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனி டம், தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தொலைபேசியில் பேசி யதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஏல விவசாயிகள் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் பெற்று செல்லலாம் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் டி.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொரோனா காரணமாக, கேரளாவில் ஏலத்தோட்டங்களுக்கு செல்ல அம்மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. ஆரம் பத்தில் இ-பாஸ் பெற்று ஏலத்தோட்டங்க ளுக்கு சென்று வந்த தமிழக விவசாயி களுக்கு தற்போது இ-பாஸ் மறுக்கப்படுவ தால் ஏலச்செடிகளை பராமரிப்பதிலும், ஏலக் காய்களை விற்பனைக்கு பதிவதிலும் சிரமம் உள்ளது. அனுமதி மறுக்கப்படுவதால் 30 ஆயிரம் தோட்டத் தொழிலாளர்கள், 1,500  ஜீப் ஓட்டுநர், உரிமையாளர்கள் பாதிக்கப் படுகின்றனர். இந்தநிலையில் விவசாயிகள், மற்றும் தொழிலாளர்கள் இடுக்கி மாவட்ட ஏலதோட்டங்களுக்குச் செல்ல அனு மதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச்செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கடிதம் அனுப்பப்பட்டது . அதனைத்தொடர்ந்து கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், கேரள மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனை தொடர்பு கொண்டு ஏலத் தோட்டத் தொழிலாளர் களின் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு கேட்டுக்கொண்டார். “இது தொடர்பாக கேரள மாநில அரசு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்திருப்பதாகவும். இதன டிப்படையில் இடுக்கி மாவட்ட ஆட்சிய ருக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட் டுள்ளதாகவும் இ-பாஸ் மூலம் அனுமதி பெற்று விவசாயிகள் செல்லலாம்” என கேபாலகிருஷ்ணனிடம் கொடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். எனவே தேனி மாவட்ட ஏல விவசாயி கள் இ-பாஸ் மூலம் விண்ணப்பித்து ஏலத்தோட்டங்களுக்கு சென்று வரலாம்.

காமராசர் பல்கலை கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்காதது மனிதத்தன்மையற்ற செயல்

பல்கலை.பாதுகாப்புக்குழு கண்டனம்

மதுரை, ஜூலை 3- மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இயங்கி வரும் அருப்புக்கோட்டை, திருமங்க லம்,வேடசாந்தூர், சாத்தூர், அழகர் கோவில் சாலை ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் 400 க்கும் மேற்பட்ட கெளரவ விரிவு ரையாளர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல ஊதியம் வழங்கப்படாததை மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பாதுகாப்புக் குழு வன்மையாகக் கண்டிதுள்ளது. இது குறித்து அமைப்பின் தலைவர் சீனிவாசன், செயலாளர் இரா.முரளி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை: அரசின் உத்தரவு வரும் வரை பல்கலைக் கழகம் காத்திராமல் உடனடியாக ஆசிரி யர்களுக்கு ஊதியம் வழங்க துணை வேந்தர் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏற்கனவே பல்கலைக் கழக மான்யக் குழு அளிக்க விதித்துள்ள 50,000 ரூபாய் குறைந்த பட்ச ஊதியத்தை வழங்கா மல் 15,000 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டு வந்துள்ள நிலையில் அதுவும் மறுக்கப்பட்டுள்ளது மனிதத் தன்மையற்ற செயலாகும். ஊதியத்தை உடனடியாக வழங்கி விட்டு பின்னர் ஆட்சிக்குழுவின் ஒப்புதலைப்பெற வழிவகை உள்ளது. நிதிக்குழுவும் ஆட்சிக்குழுவின் அதிகாரத்திற்குட்பட்டது என்பதால் துணை வேந்தர் மேலும் ஆசிரியர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்க வேண்டாம்.  கல்லூரி மாணவர் சேர்க்கை கொரோனா காலத்தில் அரசின் விதிகளை மீறி ஆன் லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தும் கல்லூரிகள் மீது மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இணைய வழி மாணவர் சேர்க்கை ஏழை-எளிய கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும்.

;