தக்காளி விலை உயர்வு
திண்டுக்கல்:
தொடர் மழை காரணமாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி வரவில்லை. திண்டுக்கல் மாவட் டத்திலிருந்தும் தக்காளி வரத்து குறைந்ததால் ரூ.10க்கு விற்ற ஒரு கிலோ தக்காளிரூ.57க்கு விற்கிறது.திண்டுக்கல் அருகேயுள்ள அய்யலூரில் தக்காளி சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு சென்ற வாரம் 30 டன்தக்காளி வந்தது. வரத்து அதிகரித்தால் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.200-க்குவிற்பனையானது. தற்போது மாவட்டத் தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தற்போது ஒரு டன் தக்காளி மட்டுமே வந்தது. ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்தது. இதனால் பத்து ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி ரூ.57-க்கு விற்கப்படுகிறது.
*********************
காலமானார்
இராமநாதபுரம்:
கடல்தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் அ.சுடலைக் காசியின் மனைவிவிமலாசெவ்வாயன்று மாலை இராமேஸ்வரத்தில் காலமானார். அவரது மறைவுச்செய்தியறிந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை, மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் என்.கலையரசன் ஆர்.குருவேல், எம்.முத்துராமு, எம்சிவாஜி, கருணாகரன் மற்றும் எம். அய்யாத்துரை, குமார், மலைராசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஜி.சிவா, ஜஸ்டின், அசோக், டி.ராமச்சந்திரபாபு, எம். கருணாமூர்த்தி, சீனிவாசன் உள்ளிட்டோர் விமலாவின் உடலுக்கு மாலை யணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
*********************
ஆர்ப்பாட்டம்
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் இளையான் குடியில் சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சிஐடியு மாவட்ட நிர்வாகி பி.முருகன் தலைமைவகித்தார். விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் எஸ். சந்தியாகு, எஸ். ராஜூ,மாவட்டக்குழு உறுப்பினர் கே.அழகர் சாமி ஆகியோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், “தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை 200 நாளாக ஆக்க வேண் டும், கூலி நாளொன்றுக்கு ரூ.600 வழங்கவேண்டும். மின்சார சட்டம் 2020 ஐகைவிட வேண்டும். கொரோனா நிவாரண உதவி குடும்பத்துக்கு ரூ.7,500 வழங்கவேண்டுமென வலியுறுத்தினர்.
*********************
எரியூட்டிய உடல் மீது எரிந்த நிலையில் மற்றொரு உடல்
இராஜபாளையம்:
இராஜபாளையம் காயகுடியாற்று பகுதியில் சுடுகாடு உள்ளது. இதில் செவ்வாய்கிழமை இரவு நெஞ்சு வலி காரணமாக இறந்தவரின் உடலை எரியூட்டி விட்டு உறவினர்கள் சென்றனர். இந்தநிலையில், புதன்கிழமை காலை இறுதி காரியம் செய்வதற்காக உறவினர்கள் அங்கு வந்தனர். அப்போது, அந்த உடல்மீது, எரிந்த நிலையில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் வந்து உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில், இறந்தவர் செவல்பட்டியைச் சேர்ந்த ராம்சிங் (26) என்பதும், கட்டட வேலை செய்து வந்த இவர், இரு தினங்களாக தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வீட்டில் தெரிவித்ததும் தெரியவந்துள்ளது.
*********************
வழிப்பறி: இருவர் கைது
விருதுநகர்:
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் ஜேசுக்கனி(47). பலசரக்குக் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர், கடையை மூடிவிட்டு வி.வி.ஆர்.காலனி வழியாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரைஇரு சக்கர வாகனத்தில் வந்து வழிமறித்த இருவர் கத்தியைக் காட்டி அவரிடம் பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தில் ஜேசுக்கனி கொடுத்த புகாரின் பேரில் அருண், ஆறுமுகப்பாண்டி ஆகிய இரு
வர் கைது செய்யப்பட்டனர்.
*********************
கொரோனாவுக்கு காவல் அதிகாரி பலி
மதுரை:
மதுரை மாநகர் சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த சந்தான பாண்டிகொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப் பட்ட நிலையில், மதுரையில் உள்ள தனி
யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். மூச்சுத்திணறல் அதிகரித்து புதனன்று அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 56.