tamilnadu

img

மதுரையில் புதனன்று நடைபெற்ற தீக்கதிர் வைரவிழா ஆண்டு துவக்க விழா

மதுரையில் புதனன்று நடைபெற்ற தீக்கதிர் வைரவிழா ஆண்டு துவக்க விழாவில்,   தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் நினைவாக, சிபிஎம் விருதுநகர் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் ஜே.ஜே. சீனிவாசன் அளித்த ஸ்மார்ட் டிவியை, கட்சியின் மூத்த தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன்,  மாவட்டச் செயலாளர் கே.அர்ஜுணன் ஆகியோர் வழங்கினர்.

மதுரை கண்மார்க் ஊறுகாய் நிறுவன உரிமையாளர் செல்வராஜ், தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ.50 ஆயிரம் மற்றும் இரண்டு ஆண்டுச் சந்தாக்களை தலைவர்களிடம் வழங்கினார்.

தீக்கதிரின் முதல் வாசகர்களில் ஒருவரான பெரியார் தொண்டர் பி.வரதராசன், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களை கவுரவித்தார்.

தீக்கதிர் திருவனந்தபுரம் செய்தியாளர் கே.ஜெயக்குமாருக்கு மார்க்ஸ் சிலையை வழங்கி கட்சியின் தலைவர்கள் கவுரவித்தனர்.

;