முற்போக்கு இலக்கிய ஏடான செம்மலரின் பொன்விழா கொண்டாட்டம், மதுரையில் ஞாயிறன்று மாலை, செம்மலர் ஆசிரியர் ச.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. முதன்மைப் பொது மேலாளர் க.கனகராஜ், தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், செம்மலர் முன்னாள் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள், தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.நன்மாறன், கே.பாலபாரதி, எழுத்தாளர் தேனி சீருடையான், மூத்த துணை ஆசிரியர் தி.வரதராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.