tamilnadu

img

பணிநீக்கப்பட்ட டாஃபே தொழிலாளர்கள் உயர்நீதிமன்றம் முன்பு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

மதுரை, நவ.30-  தொழிற்சங்கம் அமைத்து கோரிக்கை களை எழுப்பியதால் பணியிலிருந்து நீக்கப்பட்ட டாஃபே தொழிலாளர்கள் தரப்பிடம் உயர்நீதிமன்ற நீதிபதி எந்த விசார ணையும் நடத்தவில்லை என்றும் வழக்கை வேறு நீதிபதியிடம் விசாரிக்க ஒப்படைக்கக் கோரியும்  உயர்நீதிமன்ற மதுரை கிளை  முன்பு டாஃபே தொழிலாளர்கள் நவம்பர் 30 புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பாண்டியராஜபுரத்தில் உள்ள  டாஃபே நிறுவனத்தில் கடந்த 2005-ஆம்  ஆண்டு பணியாற்றிய தொழிலாளர்கள் பலர் தொழிற்சங்கம் அமைத்து, எழுத்துப்பூ ர்வமாக சில கோரிக்கைகளை எழுப்பினர்.

இதனால் 20 தொழிலாளர்களை டாஃபே நிறுவனம் பணி நீக்கம் செய்தது. சுமார் 17 ஆண்டுகளாக இந்த தொழிலா ளர்களின் பிரச்சனை தீர்க்கப்படவில்லை. இந்த நிலையில்  பாதிக்கப்பட்ட தொழி லாளர்கள்  தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ளது. தற்போது வழக்கை உயர்நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவர் விசாரித்து வருகிறார். இந்த பெண் நீதிபதியின் கணவர்  டாஃபே நிறுவனத்தின் தணிக்கையாளர் ஆவார். எனவே இந்த பெண் நீதிபதி விசாரித் தால் நியாயம் கிடைக்காது. வேறு நீதி பதிக்கு வழக்கை மாற்ற வேண்டுமென தொழிலாளர்கள்  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு நவம்பர் 28 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட தரப்பிடம் நீதிபதி  எந்த விசாரணையும் நடத்தவில்லை எனக் குற்றம்சாட்டிய தொழிலாளர்கள், இந்த  வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப் படும் என நீதிபதி கூறியுள்ளார் என்று தெரி வித்தனர். இந்த நிலையில் வழக்கை வேறொரு  நீதிபதிக்கு மாற்றக்கோரி  நீதி வழங்க வேண்டுமென வலியுறுத்தி டாஃபே நிறுவனத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட 20 தொழிலாளர்கள் நவம்பர் 30 புதனன்று காலை உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிக்கு எப்போது நீதி கிடைக்கும்

;