tamilnadu

img

தொழில் முதலீடுகளை திரட்ட அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர்

சென்னை, ஜூலை 26- தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் இந்த மாதம் அமெரிக்கா செல்வ தற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. பின்  னர் பல்வேறு காரணங்களால் அவர்  அமெரிக்கா செல்லும் தேதி மாற்றப் பட்டது. வருகிற சுதந்திர தினத்தன்று ஆகஸ்ட் 15 ஆம் தேதி கோட்டையில் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி யேற்ற உள்ளார். அதன்பின்னர், ஆகஸ்ட்  22 ஆம் தேதி அவர் அமெரிக்காக செல்ல  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெ ரிக்கா செல்வதற்காக ஒன்றிய அரசிடம்  அனுமதி கோரப்பட்டது. இந்த நிலையில்  அவர் 15 நாட்கள் வெளிநாடு சென்று வர  ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர் பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.