சிபிஎம் மாநாட்டுக்கு நிதி வழங்கிய மணமக்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டம்ராயனூர் கிளை செயலாளர் வி.சக்திவேல் - தங்கம் இல்லத் திருமண விழா தான்தோன்றி மலையில் திங்கட்கிழமை நடைபெற்றது. மணமக்கள் முனைவர் கே.ஹரிகரன் - எஸ்.சுஷ்மிதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ.10 ஆயிரம், நிர்மல் பள்ளி நிதியாக ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.12 ஆயிரத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் ஆகியோரிடம் வழங்கினர். கட்சியின் மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, மாநகரச் செயலாளர் எம். தண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.