கோயம்புத்தூர், டிச.14- கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யா லயா பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக தற் கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக சின்மயா பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு, போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டு, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கைதாகி சிறையில் உள்ள ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.