tamilnadu

img

விக்கிரவாண்டி வாக்காளர்க்கு முதல்வர் வேண்டுகோள்!

சென்னை, ஜூலை 5 - விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலை வர்கள் விக்கிரவாண்டியில் முகா மிட்டுள்ளனர்.  இந்த நிலையில், திமுக வேட்பா ளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதன் சாராம்சம் வருமாறு: வரும் ஜூலை 10 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா என்கிற சிவ சண் முகத்துக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். தடம் மாறாத தொண்டர்... இந்தியா கூட்டணியின் வேட்பாள ராக போட்டியிடும் அன்னியூர் சிவா  என்கிற சிவ சண்முகத்தை உங்களுக்கு தனியாக அறிமுகம் செய்ய வேண்டி யதில்லை! 1986-ஆம் ஆண்டு முதல், தடம் மாறாதவர் - நிறம் மாறாதவர். உங்கள் மண்ணின் மைந்தர் அவர்! மக்களோடு மக்களாக, மக்கள் பணியாற்றும் மக்கள் தொண்டர் தான் அன்னியூர் சிவா.

1.16 கோடி பேருக்கு  மகளிர் உதவித்தொகை

1 கோடியே 16 லட்சம் மகளிர் மாதந் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெறுகிறார்கள். இந்த மாதத்தில் இருந்து புதிதாக 1 லட்சத்து 48 ஆயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை தரப் போகிறோம்! மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து வசதி செய்து தரப்பட்டிருக்கிறது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம், இளைஞர்கள் அனைத்து வேலைகளை யும் பெற தகுதி உள்ளவர்களாக உயர்த்தப்பட்டு வருகிறார்கள். ‘புதுமைப்பெண் திட்டம்’ மூலமாக, அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக் கல்விக்கு வரும் மாணவியருக்கு மாதந் தோறும் ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது. மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு உள் இடஒதுக்கீடு  இதே மாதிரி, மாணவர்களுக்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் மூலமாக தரப் போகிறோம். இப்படி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏதாவது ஒரு நேரடி பலன் கிடைக்கும் வகையில், எமது அரசு செயல்பட்டு வருகிறது.  பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்  துறையை உருவாக்கியதே கலைஞர் தான். வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 20 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கிய ஆட்சி, திமுக ஆட்சி! பட்டியலின சமூ கங்களின் இடஒதுக்கீட்டை அதிகரித்த ஆட்சி, தி.மு.க. ஆட்சி. அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை, ‘சமத்துவ நாளாக’ அறிவித்திருக்கிறோம்! பாஜக கூட்டணிக்குப்  பாடம் புகட்டுங்கள் ஏ. கோவிந்தசாமிக்கு மணிமண்ட பம் அமைக்கப்பட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத் தில், துப்பாக்கிச் சூட்டில் பலியான சமூக நீதிப் போராளிகளுக்கான நினை வகம் கட்டிக் கொண்டிருக்கிறோம். இது இரண்டையும் வெகுவிரைவில் விழுப்புரத்தில் நான் திறந்து வைக்க இருக்கிறேன். சமூக நீதிக்கு எதிரான பாஜக கூட்டணியைத் தோற் கடிப்பதன் மூலம், சமூக நீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்கப்  பாடம் புகட்டுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.  மறவாதீர், உங்கள் சின்னம் உதய சூரியன்! வாக்களிப்பீர் உதய சூரியன்!”.  இவ்வாறு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

;