districts

img

100 நாள் வேலை கேட்டு காத்திருக்கும் போராட்டம்

ஈரோடு, ஜூலை 8- மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர்கள் காத் திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம் 23 கிராம ஊராட்சிகளைக் கொண்டது. இங்கு வசிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக கிராமப்புற வேலை உறுதி சட்டத்தின்படி வேலை அளிக்க வேண்டும் என அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில்  காத்திருக்கும் போராட்டம் நடைபெற் றது.  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத் தின் தாலுகா செயலாளர் டி.தங்கவேல்  தலைமை வகித்தார். மாவட் டத் தலைவர் ஆர்.விஜயராகவன், செயலாளர் கே.சண்முகவள்ளி ஆகி யோர் உரையாற்றினர். முன்னதாக, சுமார் 450பேர் பங் கேற்ற போராட்டத்தில் வேலை கேட்டு  மனுக்கள் கொடுக்கப்பட்டன. இதனைத்  தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த் தைக்கு அழைத்தனர். பின்னர், இன் னும் 15 நாட்களில் மனு கொடுத்த அனை வருக்கும் வேலை வழங்குவதாக மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவ லர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித் தார். இதனையடுத்து போராட்டம் விலக் கிக் கொள்ளப்பட்டது.