tamilnadu

தஞ்சை தமிழ் பல்கலை., துணைவேந்தர் நியமனம் ரத்துக்கு இடைக்காலத் தடை

 மதுரை: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக பாலசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த சேர்ந்த பேராசிரியர் ரவீந்திரன் என்பவர்,” தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தராக பாலசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது நியமனத்தில் விதி மீறில் உள்ளது. உரிய கல்வித்தகுதியின்றி, அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளின்படி அல்லாமல், விதிகளை மீதி அவரது நியமனம் நடைபெற்றுள்ளது. எனவே அவர் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என வழக்குத் தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த தனி நீதிபதி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். இதநை எதிர்த்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் பாலசுப்பிரமணியம் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பாலசுப்பிரமணியனின் நியமனம் பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளைப் பின்பற்றியே நடைபெற்றது. ஆகவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை செவ்வாயன்று விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பாலசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இது குறித்து ரவீந்திரன் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

;