tamilnadu

img

ஆக.12-15ல் மார்த்தாண்டத்தில் தமுஎகச மாநில மாநாடு

 சென்னை, ஆக. 8 – தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் 15வது மாநில மாநாடு ஆகஸ்ட் 12 முதல் 15ஆம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நகரில் நடைபெற உள்ளது. ‘தனித்துவம் நமது உரிமை; பன்மைத்துவம் நமது வலிமை’ என்கிற முழக்கத்துடன் இந்த மாநாடு நடை பெறுவதாக அமைப்பின் பொதுச் செய லாளர் ஆதவன் தீட்சண்யா தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக திங்களன்று (ஆக.8) சென்னையில் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:  இந்தியாவின் முதல் சுதந்திர தினத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி யினை குடியாத்தத்தில் உள்ள கோட்டா. வெங்கடாசலம் நெய்து கொடுத்தார். தமுஎகச மாநாட்டில் ஏற்றுவதற்காக 75வது சுதந்திர தின கொடியை அவ ரின் குடும்பத்தினர் நெய்துகொடுத்த னர். அந்த கொடி பயணம் ‘வெள்ளை யனே வெளியேறு’ இயக்கம் தொடங்கப்பட்ட ஆகஸ்ட் 8 அன்று குடி யாத்தத்தில் இருந்து தொடங்கியது.

இந்த கொடியை ஆகஸ்ட் 9 அன்று  சென்னையில் விடுதலைப் போராட்ட வீரர், தகைசால் தமிழர் விருது பெற்ற  என்.சங்கரய்யாவிடம் ஒப்படைக்கி றோம். அங்கிருந்து கொடி பயணத்தை  இந்தாண்டு தகைசால் தமிழர் விருது பெற உள்ள ஆர்.நல்லகண்ணு தொடங்கி வைக்கிறார். இந்த கொடி பயணம் தமுஎகச முன்னோடிகளாக கருதும் பாரதிதாசன்,  தமிழ்ஒளி, பாலசரஸ்வதி, பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம், பாரதியார்  வாழ்ந்த இடங்கள் வழியாக சென்று ஆகஸ்ட் 11ஆம் தேதி மாநாட்டு திடலை  வந்தடைகிறது. ஆகஸ்ட் 12ஆம் தேதி மாநாட்டை தொடங்கி வைக்கும் ஜம்மு -காஷ்மீர் மக்களின் உரிமைக்குரலாக ஒலிக்கும் யூசுப் தாரிகாமியிடம் வழங்கப்படும். அந்தக்கொடி சிறப்பு நிகழ்வாக ஆகஸ்ட் 14 அன்று நள்ளிரவு  ஏற்றப்பட உள்ளது.

பொதுமாநாடு

 பொதுமாநாட்டின் ஒருபகுதியாக 12ஆம் தேதி மாலை இயக்குனர் த.செ.ஞானவேல் கலைப்பேரணியைத் தொடங்கி வைக்கிறார். பொது மாநாட்டை முகமது யூசுப் தாரிகாமி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ், சங்க த்தின் தலைவர்களான ச.தமிழ்செல் வன், சு.வெங்கடேசன் எம்.பி, மதுக்கூர் ராமலிங்கம், ஆதவன் தீட்சண்யா,  ரோகிணி ஆகியோர் உரையாற்றுகின்ற னர்.

பிரதிநிதிகள் மாநாடு 

ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை பிரதி நிதிகள் மாநாட்டில் 600 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டை வரலாற்றாளர் ஊர்வசி புட்டாலியா, கேரள முன்னாள் கல்வி யமைச்சர் எம்.ஏ.பேபி ஆகியோர்  தொடங்கி வைத்து உரையாற்று கின்றனர். 15ம் தேதி வரை பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. 

கருத்தரங்கு

அன்றைய தினம் மாலை ‘படைப்புத் தளத்தில் சவால்கள்’ என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் எழுத்தா ளர்கள் நக்கீரன், சுகிர்தராணி, விஷ்ணு புரம் சரவணன் ஆகியோர் உரையாற்று கின்றனர். ஆகஸ்ட் 14 மாலை ‘பண்பாட்டுத் தளத்தில் சவால்கள்’ எனும் தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ், நடனக்கலைஞர் நிருத்யா, ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ, தென்னிந்தியக் கோயில்கள் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

வெளியீடுகள்

புகைப்படம், ஓவியம், புத்தகம் என 13 கண்காட்சிகள் நடைபெற உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள், குறுந்தகடுகள் வெளியீட்டு நிகழ்வில் எழுத்தாளர் சல்மா உரையாற்றுகிறார். தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றத்தின் பொதுச்செயலாளர் மருத்து வர் அறம், கேரள புரோகமன கலா சாகித்திய சங்கத்தின் ஜி.பி. இராமச் சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

தேசிய கொடியேற்றம் 

இந்திய விடுதலையின் 75 ஆம்  ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் 14ஆம் தேதி நள்ளிரவு ‘சிகரம்’  ச.செந்தில்நாதன் தலைமையில் எஸ். ஏ.பெருமாள் கொடியேற்றுவதுடன் தொடங்குகிறது. இந்தியாவின் பன்முக கூறுகளை அழித்து ஒரு நாடு, ஒருமதம், ஒருமொழி என ஒற்றைத்தன்மை கொண்ட காவி பயங்கரவாதம் பீடித்துள்ள நிலையை மக்களிடம் கொண்டு செல்வது குறித்து  மாநாடு விவாதிக்கும். ஜெர்மன், இத்தாலியை எப்படி சர்வாதிகாரம் ஆட்கொண்டது என்பதை விளக்கு வதற்கான நடைமுறையை உரு வாக்கும்.

கலைஇரவுகள்

இந்த மாநாட்டையொட்டி மார்த்தா ண்டத்தில் 11 ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதி வரை 5 கலை இரவுகள் நடக்கின்றன. தமிழகம் மற்றும் கேரள கலைக்குழுக்களின் நிகழ்ச்சி களும், இயக்குனர் கரு.பழனியப்பன், பாடலாசிரியர் யுகபாரதி, வி.என். முரளி, வி.எஸ் பிந்து உள்ளிட்ட ஆளு மைகளின் உரைகளும் இடம்பெறு கின்றன. கலை இரவோடு மாநாடு நிறைவுபெறும்.

இரவிலும் அனுமதி தருக! 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன் பாக பிரதான அரசியல் கட்சிகளிடம், கலை இலக்கிய கோரிக்கை சாசனத்தை வழங்கினோம். தேர்தலுக்கு பிறகு முதல மைச்சரை சந்தித்து அவற்றை நினைவு கூர்ந்தோம். கலை, இலக்கிய, பண்பாட்டு நிகழ்வுகளை இரவு 10 மணிக்கு மேல் நடத்த  அனுமதி மறுக்கின்றனர். பல இடங்களில் நிகழ்வுகளை நடத்தவே அனுமதி மறுக்கப் படுகிறது. தமுஎகச-வின் கலைஇரவுகள் விடிய விடிய நடத்தப்படும். இதற்கு அனு மதி மறுக்கின்றனர். கலை இலக்கிய பண்  பாட்டு நிகழ்வுகளுக்கு அனுமதி மறுப்பதை தடுக்க வேண்டும். 

இயல், இசை, நாடக மன்றம், நலவாரியம் போன்றவற்றை மறுசீரமைப்பு செய்ய வேண்  டும். பதிவு செய்யப்பட்ட நாடகக்குழுக்கள் ஒத்திகை மேற்கொள்ள, நிகழ்வுகளை நடத்த கர்நாடகத்தில் குறைந்த கட்டணத்தில் அரங்குகள், பள்ளி, கல்லூரி இடங்கள் வழங்கப்படுகின்றன. அதேபோன்று தமிழ கத்திலும் வழங்க வேண்டும். மாவட்ட வாரிய தொல்லியல் துறை கண்  காட்சி நடத்த வேண்டும். மாவட்ட நூலகங்க ளுக்கு நூல்களை தேர்வு செய்ய ஆணைக்  குழு ஒன்று உள்ளது. அதில் எழுத்தாளர்களே இடம் பெறாத நிலை உள்ளது. குழந்தை களுக்கான நூல்களை தேர்வு செய்ய தனி யாக ஒரு தேர்வு குழுவை அமைக்க வேண்  டும். தமிழகத்தில் ஆட்சி மொழி, வழக்காடு  மொழியாக தமிழை கொண்டு வர வேண் டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட உள்ளன.

பல்வேறு இனம், மொழி, பண்பாடுகளை கொண்டது இந்தியா. இதற்கு மாறாக, ஆரிய நாகரீகத்தையும், சமஸ்கிருத மொழியையும் கொண்டு வந்தால் சமுதாயம் அழிந்துவிடும். இந்தியாவை இந்தியாவாக இருக்க விடுங்  கள். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு  வர வேண்டும், புதிய கல்விக்கொள்கையை கைவிட வேண்டும், மாநில அரசின் மருத்துவ  படிப்புக்கான இடங்களை புறவாசல் வழி யாக களவாடும் நீட் தேர்வை கைவிட வேண்  டும். நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் தமி ழக சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத் திற்கு ஒப்புதல் தர வேண்டும். ஆங்கிலேயர்கள் பயன்படுத்த தயங் கிய யுஏபிஏ (உபா) உள்ளிட்ட ஆள்தூக்கி சட்டங்களை சுதந்திர இந்தியாவில் பயன்  படுத்துவது, கருத்துரிமைக்கு எதிரான இத்த கைய சட்டங்களை கைவிட வேண்டும் என்  பன உள்ளிட்ட கோரிக்கைகள் மாநாட்டின் வாயிலாக வலியுறுத்தப்பட உள்ளன.  இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது தமுஎகச நிர்வாகிகள்  நாடகவியலாளர் பிரளயன், பத்திரிகை யாளர் மயிலைபாலு, எழுத்தாளர் ராஜ சங்கீதன், நாடகக் கலைஞர் ஹேமாவதி, மாநி லக்குழு உறுப்பினர் நிறைமதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






 

;