சென்னை, ஜூன் 18 ரஷ்யாவில் உயர் கல்வி பயில இந்திய மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். 2023-ஆம் கல்வி ஆண்டுக்கான அகில இந்திய ரஷ்ய கல்விக் கண் காட்சியின் இரண்டாம் பதிப்பை தமிழ்நாடு சுகா தாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை யில் தொடங்கி வைத்தார். சென்னை யில் உள்ள தென்னிந்தியா வுக்கான ரஷ்ய துணைத் தூதர் ஒலெக் என். அவ்தீவ் சென்னை ரஷ்ய மாளிகையின் இயக்குநரும் துணைத் தூதருமான கெனடி ஏ.ரோகலேவ் ஸ்டடி அப்ராட் எஜூ கேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறு வனத்தின் மேலாண் இயக்குநர் சி. ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜூன் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடை பெற்ற இந்தக் கண்காட்சியில், சென்னை மற்றும் அண்டை மாவட் டங்களில் இருந்து மருத்துவப் படிப்பில் சேர நூற்றுக்கணக்கான மாணவர்கள் வருகை தந்தனர். மாணவர்கள் தங்களுக்கு விருப்ப மான இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கு ரஷ்யாவில் உள்ள பல்கலை கழகங்களை தேர்வு செய்தனர். இந்தக் கல்விக் கண்காட்சி தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் ஜூன் 20-ஆம் தேதி ரெசி டென்சி ஹோட்டலிலும்;
திருச்சி யில் ஜூன் 21-ஆம் தேதி ஃபெமினா ஹோட்டலிலும்; சேலத்தில் ஜூன் 22-ஆம் தேதி ஜி.ஆர்.டி. ஹோட்ட லிலும்; கோயம்புத்தூரில் ஜூன் 23-ஆம் தேதி தி கிராண்ட் ரீஜெண்ட் ஹோட்டலிலும் இக்கண்காட்சி நடைபெறவுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங் களுக்கு, மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9282 221 221 / 99401 99883. 2023-24-ஆம் கல்வியாண்டில் இந்திய மாணவர்களுக்கு 5000க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களை ரஷ்ய மருத்துவப் பல்கலைக் கழகங்கள் வழங்க உள்ளன. வெளி நாட்டு மருத்துவப் பல்கலைக் கழகங்கள் வழங்கும் மருத்துவப் படிப்புகளை அங்கீகரிப்பதற்காக, தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள சமீபத்திய நிபந்த னைகளை அனைத்து ரஷ்யப் பல்கலைக்கழகங்களும் முழுமை யாக பூர்த்தி செய்கின்றன. ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் படித்து முடிக்கும் இந்திய மாணவர்கள் தங்கள் சொந்த நாட்டில் மருத்து வம் பார்ப்பதற்கு, அவர்கள் பெறும் பட்டங்களுக்கு என்.எம்.சி. அமைப்பின் அங்கீகாரம் இன்றிய மையாத ஒன்றாகும். நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான படிப்புகளில் தேர்ச்சிபெற்ற இந்திய மாணவர்கள் ரஷ்ய மருத்து வத்தில் இளங்கலை மற்றும் முது கலை படிப்புகளுக்கு விண்ணப் பிக்கலாம். தமிழ் வழி மாணவர்க ளும் விண்ணப்பிக்கலாம். ரஷ்யா வில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு சி.இ.டி., ஐ.இ. எல்.டி.எஸ். போன்ற முன் தகுதித் தேர்வுகள் எதுவும் இல்லை.