tamilnadu

img

வேளாண் வளர்ச்சியில் தமிழ்நாடு 5.66 சதவீதம் உயர்வு

வேளாண் வளர்ச்சியில்  தமிழ்நாடு 5.66 சதவீதம் உயர்வு

சென்னை, மே  18 - கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2021 முதல் 2024 வரை சராசரியாக 5.66 சதவீதம் வேளாண் வளர்ச்சி  அடைந்து சாதனை படைத் துள்ளது. தமிழ்நாடு அரசின் வர லாற்றில் முதல் முறையாக  வேளாண்மைத் துறைக்குத்தனி நிதிநிலை அறிக்கை சட்டப்  பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 5 வேளாண் நிதிநிலை அறிக்கைகள் அளிக்கப் பட்டு மொத்தம் ரூ.1,94,076 கோடி நிதி ஒதுக்கீட்டில் வேளாண் உற்பத்தி பெருக – உழவர் பெருங்குடி மக்கள் நலம்பெற புதிய  பல திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தி வருகிறது திமுக அரசு. கடந்த 10 ஆண்டுகளில் 2012-13 முதல் 2020- 21 வரை சராசரியாக 1.36 சதவீதம் இருந்த வேளாண் வளர்ச்சி,  2021 முதல் 2024 வரை சராசரியாக 5.66 சதவீதமாக உயர்ந்து  சாதனை படைத்தது. தமிழ்நாடு அரசின் வேளாண் வளர்ச்சித் திட்டங்களால் கேழ்வரகு, கொய்யா உற்பத்தித் திறனில் இந்தியாவில் தமிழ்நாடு  முதலிடம். மக்காச்சோளம், கரும்பு, புளி, மரவள்ளிக் கிழங்கு, மல்லிகை, எண்ணெய் வித்துகள் உற்பத்தித் திறனில் இந்தியா வில் தமிழ்நாடு இரண்டாம் இடம். வேர்க்கடலை, தென்னை உற்பத்தித் திறனில் இந்தியாவில் தமிழ்நாடு மூன்றாம் இடம் என்று சாதனை படைத்துள்ளது.