பயிர் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, செப். 27 - பயிர் உற்பத்தியில் இந்தியா விலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும், மக்காச்சோளம், கரும்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் ‘வேளாண் வணிகத் திருவிழா’ நிகழ்வை முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள், விதை மற்றும் செடி விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், “கல்வியில் மட்டுமல்ல, பல்வேறு துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. வேளாண்மையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் முன்னேறி வருகிறது. நடப்பாண் டில் 5.65 லட்சம் ஹெக்டர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது” என்றார். குறு தானியம், நிலக்கடலை உற்பத்தியில் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருப்பதாகவும், முதலி டத்தை பிடிக்க முயற்சி எடுத்து வருவ தாகவும் அவர் கூறினார். கடந்த நான்கு ஆண்டுகளில் 47 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை மீண்டும் சாகு படிக்கு கொண்டு வந்துள்ளதாகவும், 456.46 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டியுள்ள தாகவும் முதல்வர் தெரிவித்தார். தமிழக முந்திரி வாரியம் என்னும் தனி அமைப்பை உருவாக்கியுள்ள தாகவும், 7 விளைப்பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெற்றுத் தந்து உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தா.ஆண்டுக்கு 12.5 லட்சம் வேலைகள் உருவாக்கம்!மோ. அன்பர சன், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் மற்றும் அரசு அதி காரிகள் கலந்து கொண்டனர்.
ஆண்டுக்கு 12.5 லட்சம் வேலைகள் உருவாக்கம்!
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாக ஒன்றிய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புக்களில் சுமார் 10 சதவிகிதம் தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளது. 4 ஆண்டுகளில் மொத்தமாக 52 லட்சம் பேர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனை “தொழில் வளர்ச்சியின் மிகச் சிறந்த குறியீடு” எனக் குறிப்பிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது சமூகவலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “2021-ஆம் ஆண்டு திருச்சியில் நான் உறுதியளித்த அளவான ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் என்பதையும் தாண்டி 12.5 லட்சம் வேலைவாய்ப்புகளை தமது அரசு உருவாக்கி வருகிறது” என்று தெரிவித்துள்ளார். “நமது ஓட்டம் இன்னும் வேகமாகத் தொடரும்!” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
