tamilnadu

img

ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தமிழ்நாடு அமைப்பு மாநாடு

ஈரோடு, செப்.21- மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, மாநில விவசாயிகள் நேரடி போராட்ட நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் ஹன்னன் முல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈரோட்டில் பெரியார் மன்றத்தில் செவ்வா யன்று ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (எஸ்.கே.எம்.) தமிழ்நாடு மாநில அமைப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநட்டில், தமிழ்நாடு முழுவதுமிருந்தும் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்க அமைப்புகள் கலந்து கொண்டன.  இம்மாநாட்டிற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பால கிருஷ்ணன் தலைமை வகித்தார். தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் கி.வே.பொன்னையன் வரவேற்புரையாற்றினார்.  இம்மாநாட்டினை ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அகில இந்திய ஒருங்கிணைப் பாளரும், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான ஹன்னன் முல்லா துவக்கி வைத்து, உரையாற்றினார்.

அப்போது, “மோடி அரசு பேச்சுவார்த்தை என்ற அடிப்படையில் போராட்டத்தை நீர்த்து போகச் செய்ய முயற்சித்து வருகிறது. இது வரை 11 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. நான் எல்லா கூட்டத்திலும் கலந்து கொண்டேன். எந்த ஒரு கூட்டத்திலும் நிகழ்ச்சி  நிரல் இல்லை. மத்திய அரசு பிடிவாதமாக மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மறுக்கிறது” என்று குறிப்பிட்டார்.  “தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு 100க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலிருந்து ஆதரவு பெருகி வருகிறது. போராட்டத்தை விரிவுபடுத்த ஆகஸ்ட் 26 மற்றும் 27 தேதிகளில் தில்லியில் அகில இந்திய விவ சாயிகள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நாடு முழுவதுமிருந்து கலந்து கொண்டனர்” என்றும் அவர் கூறினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் பி.சண்முகம் பேசுகையில், செப்.27 ஆம் தேதி பாரத் பந்தில் தமிழ்நாட்டில் விவசாயிகள் பெருந்திர ளாக பற்கேற்க வைத்து போராட்டத்தை வெற்றி பெற செய்வோம் என முழக்கமிட்டார். இம்மாநாட்டில், தமிழகம் முழுவது மிருந்து விவசாயிகள் சங்க தலைவர்கள் வி.சுப்பிரமணியன், குணசேகரன், பசுமை வளவன், இளங்கீரன், கி.வே.பொன்னை யன், ரங்கசாமி, நாராயணசாமி, கரும்பு விவசாயிகள் சங்க தலைவர்கள் ராஜ்குமார், டி.ரவீந்திரன்  உழைவர் உழைப்பாளிகள் சட்சி தலைவர் செல்லமுத்து, விவசாய தொழிலாளர் சங்க தலைவர் ஏ.லாசர் உள்ளி ட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;