மதுரை:
கல்வியில் தமிழகம் பின்தங்கிவிட்டது. கல்வியில் கேரளம் முதலிடத்திலும் ஆந்திரா கடைசி இடத்திலும்தமிழகம் எட்டாவது இடத்திலும் உள்ளது.
தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) சமீபத்தில் வெளியிட்ட ஆய்வில், இந்தியா அதன் கல்வியறிவு விகிதங்களில், அதாவது நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் எட்டியுள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பின் படி இந்தியாவின் ஒட்டுமொத்த கல்வியறிவு விகிதம் 77.7 சதவீதமாக உள்ளது.கல்வியறிவு விகிதத்தைப் பொறுத் தவரை கேரளா தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது, இரண்டாவது இடத்திலுள்ள தில்லியின் கல்வியறிவு விகிதம் 88.7 சதவீதம்,உத்தரகண்ட் 87.6 சதவீதம், ஹமாச்சல பிரதேசத்தில் 86.6 சதவீதம் ஆகும். 82.9 சதவீதத்துடன் தமிழகம் எட்டாவது இடத்தில் உள்ளது. 66.4 சதவீதத்துடன் ஆந்திரா கடைசி இடத்தில் உள்ளது.