அர்ச்சகர் திட்டத்தின் மீது பொய் பிரச்சாரம் தமிழக அரசு மறுப்பு
சென்னை, ஜூன் 30- தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில், இந்துசமய அற நிலையத் துறை அமைச்சராக பி.கே.சேகர்பாபு பொறுப்பேற்ற பின்னர், கோயில் நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆக்கிர மிப்பு நிலங்களை மீட்பது, 2000-க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்துவது உள்ளிட்ட பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக லாம் என்ற திட்டம் பரவலான வர வேற்பைப் பெற்றுள்ளது.
வதந்திகளின் பின்னணி
இந்நிலையில், அனைத்து சாதி யினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற பூசாரிகள் போதையில் நடனமாடுவதாக வதந்தி பரவி வருகிறது. இந்த வதந்திக்கு அடிப்படையாக ஸ்ரீ வில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயி லில் நடந்த சம்பவத்தின் காணொலி பயன்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு விளக்கம்
தமிழ்நாடு அரசின் உண்மை சரி பார்ப்பு பிரிவு இந்த வதந்தியை மறுத்து உள்ளது. அவர்களின் விளக்கத்தின்படி, காணொலியில் வரும் கோமதி விநாயகம் என்பவர் தக்கார் தீர்மானத்தின் அடிப்ப டையில் டிசம்பர் 20, 2024 அன்று தற்கா லிக அர்ச்சகராக நியமிக்கப்பட்டவர். தற் போது அவர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இவர் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் வந்தவர் அல்ல என்பது முக்கியமான விஷயம்.
கோயில் அலுவலர் விளக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் செயல் அலுவலர், “சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் பாரம்பரிய வழக்கப்படி நியமிக்கப்பட்ட பிராமணர்கள் என்றும், அவர்கள் அரசு அர்ச்சகர் பள்ளியில் படிக்காமல் பிராம ணர்கள் நடத்தும் அர்ச்சகர் பள்ளியில் படித்தவர்கள்” என்றும் விளக்கியுள்ளார்.
காவல்துறையில் புகார்
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வா.ரங்க நாதன் காவல்துறை இயக்குநர் அலுவல கத்தில் புகார் அளித்துள்ளார். வதந்தி பரப்பியவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், அனைத்து சாதியினரும் அர்ச்ச கராகலாம் திட்டத்தின் மீது தாக்குதல் நடத்தும் சங்பரிவார் அமைப்புகளை கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளபடி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத் தில் பயிற்சி பெற்றவர்கள் கோயில்களில் இறைப்பணியை சிறப்பாக செய்து வரு கின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் சம்பவத்திற் கும் இந்த திட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அரசு வலியுறுத்தியுள்ளது.