tamilnadu

img

பத்திரிகையாளர்களுக்கு ஹோமியோ மாத்திரைகள் வழங்கல்

தூத்துக்குடி  ,ஜூன் 5- தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு ஆர்ஸ் ஆல்பம் 30 மாத்திரை களை  ஹோமியோபதி டாக்டர் பெலிக்ஸ் வழங்கினார். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பினரும்  மனிதநேயத்தோடு உதவி செய்து வருகின்றனர்.  ஹோமியோபதி டாக்டர் பெலிக்ஸ், ஹோமியோபதி மருத்துவசங்க செயலாளர் டாக்டர் பாதுஷா ஆகியோர் பத்திரிகையாளர் மன்றத்தில் உறுப்பினர்களுக்கு ஆர்ஸ் ஆல்பம் 30 மாத்திரைகளை மன்ற தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளர் சீனிவாசன்,  கௌரவ ஆலோசகர் அருண் ஆகியோரிடம் வழங்கினார்கள். மன்ற உறுப்பினர்கள் ரவி, சதிஷ், கண்ணன், ஜெயக்குமார், மாரிராஜா, சாதிக் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதில் சிபிஎம் மாநகர் செயலாளர் ராஜா,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, மாநகர் குழு உறுப்பினர் ஜேம்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.