tamilnadu

img

வனப்பகுதியை விட்டு மக்களை வெளியேற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை திரும்பப் பெறுக!

இடுக்கி, ஜூன் 10- இடுக்கி மாவட்டத்தில் வனப்பகுதியை விட்டு, மக்கள் வாழ்விடங்களை மாற்ற  வேண்டும் என்று உச்சநீதிமன்ற உத்தரவை திரும்பப் பெறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் சுழலியல் உணர்திறன் மண்டலமாக செயல்படுத்த, 1 கிலோமீட்டர் தொலைவில் வனப்பகுதியை விட்டு, மக்கள் வாழ்விடங் களை மாற்ற வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு  ஆய்வு செய்யக் கோரி கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு செல்லும் குமுளி, கம்பமெட்டு மலைச்சாலைகள் அடைக்கப்பட்டன. குமுளி,  வண்டிப் பெரியாறு, சாஸ்தா நடை, நெடுங்கண்டம், கட்டப்பனை உள்ளிட்ட ஏலத்தோட்ட பகுதிகளுக்கு செல்லும் தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படவில்லை. தேனி மாவட்டம் வரும் கேரளம் மாநில பேருந்துகளும் வரவில்லை. சர்வதேச சுற்றுலா தலமான குமுளியில் அரசு, தனியார் பேருந்துகள் ஓடவில்லை. வாட கை கார், வேன், ஆட்டோக்கள் இயங்க வில்லை. வர்த்தக நிறுவனங்கள், உணவகங் கள், சிறிய கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. படகு சவாரி இயக்கம் தேக்கடி ஏரியில் கேரள மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் வெள்ளியன்று படகு சவாரி நடைபெற்றது. அங்கு விடுதி களில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் படகு சவாரிக்கு சென்றனர். வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் படகுகள் இயக்கப்பட்டன.