tamilnadu

img

கல் குவாரிகளும்... தொடரும் முறைகேடுகளும் - நல்லேந்திரன்

தமிழகத்தில் வருமானம் ஈட்டித்தரும் பல துறை கள் உள்ளன. அதில் ஒன்று பூமியில் பொதிந் திருக்கும் கனிமவளம். இந்தியாவில் கிடைக் கும் கனிமங்களில் பல தமிழகத்திலும் கிடைக்கின் றன. அவை மாக்னசைட், கார்னெட், இலுமனைட், மோனோசைட், சுண்ணாம்பு, லிக்னைட், கிராபைட் உள்ளிட்டவை. இவை தவிர தாதுமணல், ஜிர்கோனி யம் போன்றவையும் உண்டு. அதற்கும் மேல் ஆறுக ளில் மணல் வருவதற்கு காரணமான மலைகள் உள்ளன. இன்று ஆற்று மணல் பணம் கொழிக்கும் வியாபாரப் பொருளாக மாறிவிட்டது. மணல் என்று சொல்லும்போது ஆறுகளில் கிடைக்கும் மணல் மட்டு மல்ல, கடல் மணலும் விலை மதிப்பற்றதாகிவிட்டது.

தமிழக மலைகளில், கல்குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் வண்ண வண்ண கிரானைட் கற்கள் பெருமளவில் அரசுக்கு நல்ல வருமானத்தை ஈட்டித் தரும் ஒன்றாகும். தமிழகத்தில் கிடைக்கும் குன்னம் கருப்புக்கல் உலகத்தில் வேறு எங்கும் கிடைப்ப தில்லை. இதுபோன்ற கருப்புக்கல் விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் தான் கிடைக்கின்றது.  இத்தகைய கிரானைட் கற்களுக்கு வெளிநாடு களில் நல்ல கிராக்கி என்று தெரிந்தவுடன் தமிழ கத்தில் உள்ள மலைகளில் எல்லாம் கிரானைட் உள்ள தா எனத் தேட ஆரம்பித்தனர். இதற்காக 1979 ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் ஆரம்பிக்கப்பட்டது தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்). அதற்காக சில விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அரசுப் புறம்போக்கு மற்றும் வனங்களில் உள்ள நிலத்தில் உள்ள கனி மங்களை அரசின் நிறுவனங்களே எடுக்க வேண்டும். பட்டா இடத்தில் உள்ள கனிமங்களை அரசின் அனுமதி யுடன் எடுக்கலாம். எங்கு கற்கள் வெட்டி எடுக்கப் பட்டாலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள கனிம வளத்துறை உதவி இயக்குநர், சுரங்கத் துறை அதிகாரிகளின் உத்தரவு பெற்று அதற்கான புவி யியல் கட்டணம் செலுத்தியபின் எடுத்துச் செல்லலாம் என்பது முக்கியமானது.  இத்தகைய விதிமுறைகள் வகுக்கப்பட்டாலும் அவற்றில் முறைகேடு செய்வ தற்கான வாய்ப்புகளும் இருந்தன. அரசின் நிறுவன மான டாமின் அரசுப் புறம்போக்கு நிலத்தில் உள்ள  மலைகளை உடைத்து கிரானைட் எடுக்க முடியவில்லை என்றால் அதைத் தனியாருக்கு குத்தகைக்கு விட்டு விடலாம். 

டாமின் நிறுவனத்தில் உள்ள குவாரிகளில் கிரா னைட் கல் எடுத்து கொடுத்து, அதற்கான கூலியை பெற்றுக்கொள்வது ஒரு முறை, மற்றொரு முறை மலைகளில் கிரானைட் கல்வெட்டி எடுத்து குத்த கைக்கு எடுத்தவரே விற்றுவிட்டு அதன் விலையை டாமின் நிறுவனத்திற்கே அளித்து விடவேண்டும். இந்த இரண்டு முறையும் 2000-ஆம் ஆண்டுக் குப்பின் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இப்படித்தான் முறைகேடுகளுக்கான வாசல் திறக்கப்பட்டது. அதுவும் அதிமுக ஆட்சியில்தான். ஆனால் 1979-ஆம் ஆண்டு, தமிழக முதல்வர் மறைந்த எம்ஜிஆர் அவர்கள் டாமின் நிறுவனத்தை ஆரம்பித்ததன் நோக்கம் கிராமத்தில் உள்ள தொழி லாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதும் கனிமங்களை வரைமுறையின்றி தனியார் கொள்ளை அடிப்பதை தடுப்பதும் ஆகும்.  ஆனால் டாமின் நிறுவனம், ஆட்சியில் உள்ள வர்களின் ஆதரவாளர்கள், ஒப்பந்ததாரர்களின் கொள்ளைகளுக்கு கிரியா ஊக்கி போன்று இருந்ததே தவிர டாமின் வளரவேயில்லை.  மதுரை மேலூர் பகுதியில் உள்ள மலைகளில் தனியாருக்கு 175-க்கும் மேற்பட்ட குத்தகைக்கு வழங்கப்பட்டது. டாமின் நிறுவனத்திற்கு ஐந்து குத்தகை வழங்கப்பட்டது. அப்படி குத்தகை உரிமம் வழங்கப்பட்டதை யாரும் மதிக்கவில்லை. குத்தகை எல்லைகளை எல்லாம் உடைத்தெறிந்து கண்மாய், வழிபாட்டுத் தலங்கள், பாதைகள், தொல்லியல் பகுதி கள் என அனைத்தையும் தங்களுக்கு வேண்டிய அளவுக்கு கிரானைட் கற்களை வெட்டி எடுத்தார்கள். மூன்று ஆண்டு குத்தகை முடிந்தாலும் நீதி மன்றத்திற்கு சென்று தடைபெற்று குவாரி நடத்தி னார்கள். அப்போது கிரானைட் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தால் சட்ட அதிகாரியாக உ.சகாயம் நியமிக்கப்பட்டார். அவரது கண்டுபிடிப்புப்படி ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக உயர்நீதி மன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார் என்று தகவல்கள் வெளியாயின. 

மதுரையே இப்படி என்றால் கிருஷ்ணகிரி, தரும புரி மாவட்டங்களில் சொல்லவே வேண்டாம், திரும்பிய இடங்கள் எல்லாம் கிரானைட் தான். இன்று இதன் நிலைமை சோகமானது, அதேபோன்று வேலூர் மாவட்டத்தில் மகிமண்டலம் சோளிங்கர் பகுதிகளில் ரெண்டாடி போன்ற இடங்களில் மலை மொட்டை அடிக்கப்பட்டது.  கரூர் மாவட்டம் தோகை மலையில் மலைகள் இருந்த இடம் 200 அடி ஆழமாக நீர்த்தேக்கம் போல் உள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி தேவன்ன கவுண்டனூரில் உள்ள மலைகள் பலதும் காணாமல் போயிற்று. மலைகளுக்கு பதிலாக 200 அடி ஆழ முள்ள பள்ளங்களும் கிரானைட் எடுத்த கழிவுகள், சிலிகா தூசுகள், அந்த நகரம் முழுவதும் மலை போல் குவிக்கப்பட்டுக் கிடக்கின்றன. விழுப்புரம் மாவட்டம் சிறுவாலை பகுதிகளில் வெட்டி எடுக்கப்பட்ட கற்கள் சைஸ் செய்து விற்கப் பட்டது போக தள்ளுபடி செய்யப்பட்ட கற்களும் கழி வுக் கற்களும் அருங்காட்சியத்தில் உள்ளது போன்று இருக்கின்றன. திருவண்ணாமலை, வீராணம் திரு நெல்வேலி களக்காடு பகுதிகளும் விட்டுவைக்கப்பட வில்லை.  இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புமிக்க கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு தனியாரால் விற்கப்பட்டது. தமிழகத்தின் இயற்கைத்தோற்றம் சிதைக்கப்பட்டது. ஏராளமான வெடிமருந்துகள் பயன்படுத்திய காரணத்தினால் பறவைகளின் இனம் பல காணாமல் போயின. கிரானைட் முறைகேடு, கொள்ளை பிரச்சனை வெளியில் தெரிந்த பின்னர் தாது மணல் விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. அதிமுக அரசு தமது ஆட் சிக்காலத்தில் தாது மணல் எடுக்கும் விவகாரத்தை மறைக்க முடியாமல் அப்போது வருவாய்த்துறை செய லாளராக இருந்த (இன்றைக்கு சென்னை மாநகராட்சி ஆணையர்) ககன்தீப்சிங் பேடி தலைமையில் கன்னி யாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் கடற்கரையோரங்களில் தாது மணல் திருட்டு சம்பந்தமாக ஆய்வு நடத்தப்பட்டது. ஆனாலும் தாது மணல் திருடர்கள் ஒன்றிய அரசின் சுரங்கத் துறை யையும் மாநில அரசின் வருவாய்த்துறையையும் தங்களை தீண்டாமலேயே சமாளித்து வைத்தி ருக்கிறார்கள்.

கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியிலிருந்த அதிமுக அரசு உண்மையில் மக்கள் நலன் காக்கும் அரசாக செயல்பட்டு இருந்தால் தாது மணல் மற்றும் கிரானைட் மூலமாக வருமானத்தை பெருக்கி தமிழ கத்துக்கு இரண்டரை லட்சம் கோடி என்ன, அதற்கும் மேலும் வருமானத்தை ஈட்டியிருக்கலாம். மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்திருக்கும். ஆனால் ஒன்றிய அரசின் தாராளமயக் கொள்கையை அமல் படுத்தி முதலாளிகளை வளர்ப்பதில் அதிகக் கவனம் செலுத்தினார்கள் என்பதுதான் கனிம வளக் கொள்ளை வெளிப்படுத்தும் உண்மையாகும். இந்த நிலையில்தான் திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான் குளத்தில் முறைகேடாக செயல்பட்ட குவாரியில் உயிரிழப்பு நடந்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற தமிழ்நாடு வருவாய்த்துறை செயலா ளர் குமார் ஜெயந்த், தமிழகம் முழுவதும் உள்ள 5,000 கல் குவாரிகளில், திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தின் கல்குவாரியில் நடந்த தைப் போன்று குவாரி விதிமீறல் நடைபெறுவதைத் தடுக்கவும், விபத்துகளை தடுக்கவும் விரிவான தணிக்கை (சோதனை) நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த குமார் ஜெயந்த் கூறுகையில், “அனைத்து குவாரிகளிலும் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்டறிய ஆய்வு நடத்தப்படும். ஆய்வுகள் மீறல்கள் ஏதேனும் இருந் தால் சரி செய்யப்படும்.

சோதனையின் அடிப்படையில், சட்டத்தை அமல் படுத்தத் தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறியுள்ளார். ஆனால் விபத்து நடைபெற்ற குவாரியில் விதி மீறல்கள் நடந்துள்ளதை தமிழ்நாடு சுரங்க மற்றும்  புவியியல் துறை இயக்குநர் நிர்மல்ராஜ் ஒப்புக்கொண்டுள் ளார். “கற்கள் வெட்டியதில் விதிகள் மீறப்பட்டதால் கடந்த ஆண்டு (2021) ஏப்ரல் மாதம் கல் குவாரியை மூட நோட்டீஸ் அனுப்பப்பட்டதோடு குவாரி இயங்கக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், சட்ட விரோதமாக குவாரி தொடர்ந்து இயங்கியதால் விபத்து ஏற்பட்டது” என்றார் நிர்மல்ராஜ். குவாரியை மூட உத்தரவிட்டும் அதை நடைமுறைப் படுத்தாத அல்லது கண்காணிக்கத் தவறிய திரு நெல்வேலி சுரங்கத்துறை உதவி இயக்குநர் மீது நட வடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, பத்திரிக்கை யாளர்களிடம் இதை விவாதிக்க முடியாது என்றார்.  தினமும் நூற்றுக்கணக்கான லோடு மணல், எம்-சாண்ட், கற்கள் வெளிமாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுவது குறித்து கேட்தற்கு, இந்த சிறு கனி மங்கள் அண்டை மாநிலத்தில் அதிக விலைக்கு விற் கப்படுகிறது. இதற்கு மாநில அரசு 20 சதவீத வரி வசூலிக் கிறது. இந்த கனிமங்களை தமிழகத்திற்கு வெளியே விற்பனை செய்ய, உள்ளூர் விற்பனையாளர்களு க்கு 10 சதவீத வரி மட்டுமே வசூலிக்கப்பட்டது என்றார்.

கல் குவாரிகளில் ‘அனுமதிக்கப்பட்ட ஆழம்’ குறித்து, எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுரங்கத் துறை இயக்குநர், வழக்கமாக ஒவ்வொரு திட்டத்திற் கும் சுரங்கத் திட்டங்கள் அடிப்படையில் அனுமதிவழங் கப்படுகிறது. சம்பந்தப்பட்ட குவாரியில் நீர் மட்டத்தி லிருந்து ஐந்து மீட்டர் வரை சுரங்கப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றார். இதற்கிடையில் திரு நெல்வேலி மாவட்டத்தில் உள்ள 52 கல் குவாரி களிலும் அடுத்த இரண்டு மாதங்களில் ஆய்வு நடத் தப்படும்.  கற்களை அள்ளுவதில் விதி மீறல்களைக் கண்டறிய ட்ரோன்கள் உள்ளிட்ட நவீன கருவிக ளைக் கொண்டு ஆய்வு நடத்தப்படும். விதிமீறல்கள் நிரூபணமானால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறினார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் அண்டை மாநி லமான கேரளாவைப் போல், தமிழகத்தில் கனிமச் சுரங்கம் மற்றும் பிற மாநிலங்களுக்கு கனிமங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க, மாநில அரசு கடுமை யான சட்ட விதிகளை அமல்படுத்துமா என்ற கேள்விக்கு, பதிலளித்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். கண்ணப்பன் அதை முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.  

ஆனால் இவற்றை உண்மையில் தடுக்க செய்ய வேண்டியது என்ன? மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கும் கனிமவளங்களை (மணல், கிரானைட், தாது மணல்) பயன்படுத்தி, அமைக்கப்படும் தொழிற்சாலைகளில் தனியார் முதலீடு அதிகமாக உள்ளது. இது பெரும் இயற்கை வளக் கொள்ளைக்கு வழிவகை செய்வ தாக உள்ளது. இதில் மாற்றம் காணும் வகையில் அரசு முதலீடுகளை அதிகப்படுத்த வேண்டும் தொழில் வளர்ச்சி என்பது லாபத்திற்கான மூல தன வளர்ச்சியாக மட்டும் இல்லாமல், வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாடு சார்ந்ததாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் கனிம வளங்கள், தாது மணல், மணல் வியாபாரம், கிரானைட் உள்ளிட்டவைகள் மீது கூடுதல் விலை தீர்மானித்து வியாபாரத்தை முறைப் படுத்துவதின் மூலம் சில ஆயிரம் கோடி வருமானத்தை பெருக்கிட முடியும்.

தொகுப்பு: ச.நல்லேந்திரன்

;