tamilnadu

img

பெண்ணுரிமை பேசும் நூல்! - கு.ரவீந்திரன்

மஞ்சள் கிரகத்து மாதர்கள் (கிரக மண்டலத்தில் பெண்கள்)  ஆசிரியர்;  ஜானகி காந்தன் பதிப்பகம் ; கார்த்திகேயன் பதிப்பகம், 9250 எல்.ஐ.ஜி. 1 தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு. அயப்பாக்கம், சென்னை 77. அலைபேசி எண் ; 9043281538. விலை: ரூ.100

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினராக இருந்த மறைந்த ஜானகி காந்தன் செம்மலர் மாத இதழில் பல தொடர் நாவல்களை எழுதியுள்ளார். அவரால் எழுதப்பட்டு மகளிர் சிந்தனை  மாத இதழில் தொடராக வெளிவந்த நாட கம் தான் மஞ்சள் கிரகத்து மாதர்கள் ( கிரக மண்டலத்தில் பெண்கள்) நாடகம். மஞ்சள் கிரகம் என்ற கற்பனை யான கிரகத்தில் பெண்கள் ஆட்சி  நடத்துவதும் அந்த மண்டலத்தின் நீதி மன்றத்தில் சிலப்பதிகாரம்,அரிச்சந்திர புராணம்,  நளதமயந்தி புராணம்  ஆகிய நூல்கள் பெண் அடிமைத்தன மான இலக்கியங்கள் என்று வழக்கு  தொடுக்கப்பட்டு அதன் நூல் ஆசிரி யர்கள் விசாரிக்கப்பட்டு மாற்று நூல்கள் எழுத சொல்லி ஆணை பிறப்பிக்கப்படுகிறது.  அந்த நீதிமன்றத்தில் வள்ளு வரும், மகாகவி பாரதியும் நடுவர்களாக இருப்பதும் அவர்கள் அந்த நூல் பற்றிய தங்கள் கருத்தை பதிவு செய்வ தும் மிகவும் சிறப்பு. காதலுக்கு இலக்க ணமாக ரோமியோவும் ஜூலியட்டும் அம்பிகாபதி அமராவதியும் அனார்கலி சலீமும் எடுத்துக்காட்டுவது மிகவும் சிறப்பு.  கிரக மண்டலத்தில் பாரதியார்  பிறந்தநாள் விழா கொண்டாடப்படு வதும் பிரசவ மாற்று எந்திரம் கண்டு பிடிக்கப்படுவதும் என நகைச்சுவை யுடன் ஆழ்ந்த இலக்கிய ஞானத்தோடு  பெண்ணுரிமையை அழுத்தமாக சொல்வதில் ஒரு நூல் கல்லாக விளங்கு கிறது. நூலுக்கு பாரதியாரின் மனைவி செல்லம்மாவின் வழி வந்த கொள்ளு பேத்தி டாக்டர் உமா பாரதி, ஜனநாயக மாதர் சங்கத்தின் பா.ஜான்சிராணி, மகளிர் சிந்தனையின் ஆசிரியர் குழு வில் செயல்பட்டவர் மறைந்த பிருந்தா,  தமிழ்நாடு ஓய்வு பெற்ற மின்ஊதி யர் நல அமைப்பு மத்திய சென்னை  மாவட்டத் தலைவர் இரா. அண்ணா மலை ஆகியோர் வாழ்த்துரை வழங்கி உள்ளனர். இதைப் படிப்பதும் பரவலாக்  குவதும் தமிழ் சமூகத்தின் கடமையாகும்.

;