tamilnadu

img

நூறு நாள் வேலையை தொடங்குக! விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் மனு

நூறு நாள் வேலையை தொடங்குக! விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் மனு

நாகப்பட்டினம், செப். 5-  நாகப்பட்டினம் ஒன்றியத்தில் அனைத்து  ஊராட்சிகளிலும் நூறு நாள் வேலையை துவங்க வலியுறுத்தி, விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் நாகப்பட்டினம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றியத் தலை வர்கள் வி.ராதா மற்றும் என்.ராஜாராமன்  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பொருளாளர் ஏ. பால்பக்கிரிசாமி முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி ஒன்றியச் செயலாளர்கள் கே.செந்தில்குமார் மற்றும் ஏ.கே.மார்க்ஸ் ஆகியோர் உரையாற்றினர்.  நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவ லரிடம் மனு அளிக்கப்பட்டது.  தஞ்சாவூர் ஊரக வேலை உறுதிச் சட்ட விதிகளின்படி, வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும்.  தினக்கூலியை ரூ.600  ஆகவும், வேலை நாட்களை 200 ஆகவும்  உயர்த்த வேண்டும். ஊரக வேலை திட்டத்தை சிதைப்பதை கண்டித்தும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் பூதலூர் தெற்கு ஒன்றியக் குழு சார்பில், பூதலூர் நான்கு ரோட்டில் வியா ழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விதொச ஒன்றியச் செயலாளர் எஸ். வியாகுலதாஸ் தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் எம்.காமராஜ், கே.ராஜ கோபால், பி.கோவிந்தராஜ், பி.முத்து கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விதொச மாவட்டச் செயலாளர் ஆர். வாசு,  சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர்  ஆகியோர் கண்டன உரையாற்றினர்.