நிவாரணப் பொருட்கள் வழங்கல்
திருவில்லிபுத்தூர், மே 8- ஸ்ரீவில்லிபுத்தூர் அ.அழகர் சாமி அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் வழங்கினர். நிகழ்வில் ஊர் தலைவர் சடையப்பன் வழங்கினார். துணைத் தலைவர் ரமேஷ் , பள்ளித் தலைவர் குழந்தைவேலு, செயலர் சீனிவாசன், தலைமையாசிரியர் தெய்வானை, ஆசிரியர் முத்துலட்சுமி, சிவப்பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்,மே 8 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அரசாணை எண் 51-ஐ ரத்து செய்யக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவல கம் முன்பு வெள்ளிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் திரு மூர்த்தி தலைமை தாங்கினார் .தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கருப்பையா கோரிக்கைகளை விளக்கி பேசினார் .கிளைச் செயலாளர் திருப்பதி ராஜூ உட்பட நகராட்சி ஊழியர்கள் மற்றும் துறைவாரி சங்க நிர்வாகிகள் ஊழி யர்கள் கலந்து கொண்டனர்.
டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாதர் சங்கம் மனு
விருதுநகர், மே 8- விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு குற்றச் சம்ப வங்கள் நடைபெறக் காரண மாக உள்ள ம் டாஸ்மாக் கடை களை உடனடியாக மூடக் கோரி அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தின் மாநி லச் செயலாளர் எஸ்.லட்சுமி, மாவட்டத் தலைவர் என்.உமாமகேஸ்வரி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதா வது : தற்போது ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் 40 நாட்களுக்கு மேல் திறக்கப்படாமல் இருந்தது. மே.7-ஆம் தேதி அன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் சில இடங்க ளில் கொலை, தற்கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடை பெற்றுள்ளன. சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி வடக்கூரில் குடித்து விட்டு வந்த கணவன், மனைவியு டன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதேபோல் பெண்க ளுக்கு எதிரான ஏராளமான வன்முறைச் சம்பவங்கள் டாஸ்மாக் கடைகளால் ஏற்ப டுகின்றன. எனவே, விருது நகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடை களையும் மூட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.