tamilnadu

img

விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இலச்சினை! அமைச்சர் உதயநிதி வெளியிட்டார்

சென்னை, ஜூன் 15- தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இலச்  சினை வெளியிடப்பட்டு 30 ஆண்டுகள் பயன்  படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தேசிய மற்றும் சர்வதேச  அளவில் தமிழ்நாடு பல்வேறு விளை யாட்டுகள் பெரும் முன்னேற்றம் அடைந்து வருவதால், தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தனித்  துவத்தை வெளிப்படுத்தும் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளை பிரதிபலிக் கும் வகையிலும் தமிழ்நாட்டின் வரை படத்தை உள்ளடக்கிய புதிய இலச் சினை வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய இலச்சினையில் இடம்பெற்றி ருக்கும் மஞ்சள் நிறம் ஆற்றல் மற்றும் விளையாட்டு ஆர்வத்தையும், நீல நிறம் சுதந்திரம் மற்றும் உத்வேகத்தை குறிக்கும் வகையில் இடம் பெற்றுள் ளது. மேலும் இலச்சினையை சுற்றி அமைந்துள்ள வட்ட வடிவம் தமிழ்நாடு விளையாட்டுத் துறை முன்னேற்றத்தின் சான்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த புதிய இலச்சி னையை திருப்பூர் மாவட்டத்தில் கலை ஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி  ஸ்டாலின், வெளியிட்டார்.