tamilnadu

img

கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் இதுவரை 700 பழமையான பொருட்கள் கிடைத்துள்ளன... அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி...

மதுரை:
கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் இதுவரை 700 பழமையான பொருட்கள் கிடைத்துள்ள என்று தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வு தளத்தில் சனிக்கிழமை தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்கே. ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.கீழடி மற்றும் அருகேயுள்ள அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏழாம் கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.கொரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்த காரணத்தால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக கடந்த மே மாதம் 8 -ஆம் தேதிமுதல் கீழடி உள்ளிட்ட இடங்களில்அகழாய்வுப் பணிகள் நிறுத்தப் பட்டன.

தற்போது பொது முடக்கத்தில்அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக கடந்த இரு நாட்களுக்கு முன்னர் கீழடி உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் கீழடி அகழாய்வு தளத்திற்கு வந்து அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளைப் பார்வையிட்டனர்.மேலும் ஏழாம் கட்ட அகழாய் வின்போது கண்டெடுக்கப்பட்ட பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பொருள்களையும் பார்வையிட்டனர்.கீழடியில் அமைய உள்ள அருங் காட்சியகத் திட்டப் பணிகளையும் அவர்கள் பார்வையிட்டனர். தொல்லியல் துறை இணை இயக்குனர்சிவானந்தம் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள்  குறித்தும் அப்போது கண்டெடுக்கப்பட்ட பண்டைய தமிழர்கள் பயன்படுத் திய பொருட்கள் பற்றியும் அமைச் சர்களிடம் விளக்கிக் கூறினர். 

இந்த ஆய்வின் போது மானாமதுரை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆ.தமிழரசி, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உள்ளிட்ட அரசுஅதிகாரிகள் உடனிருந்தனர்பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில் “கீழடி அகழாய் வில் தங்க காதணிகள், மணிகள், பாம்படம் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன, முதல் முறையாக கீழடி அகழாய்வில் முழுமையான வடிவைக் கொண்ட குறுவாள் கிடைத்துள்ளது. ஆதன், கதிரன் உள்ளிட்ட 13 முழு தமிழ் எழுத்துக் கள் கொண்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இதுவரை நடைபெற்ற அகழாய்வில் இவ்வளவுபெரிய எழுத்துக்கள் கிடைத்ததில்லை, ஏழாம்  கட்ட அகழாய்வில் 700 பழமையான பொருட்கள் கிடைத்துள்ளன, கீழடியில் அகழாய்வை முதலில் நடத்திய இந்திய தொல்லியல்துறை கீழடி நாகரீகம் 500 ஆண்டுகள் பழமையானது எனச் சொன்னது,ஆனால் தமிழக தொல்லியியல் துறை ஆய்வில் 2,600 ஆண்டுகள் பழமையான நாகரீகம் என உறுதியாகி உள்ளது. 
இந்திய தொல்லியல்துறை ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக் கையை அளிக்கவில்லை. ஒன்றிய அரசு தமிழகத்தில் நடத்திய அகழாய்வுகளின் முடிவுகளை அறிக்கையாக வெளியிட வேண்டும். கீழடியில் உலக அளவில் சர்வதேசத் தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்.” என் றார்.

;