tamilnadu

img

சிறு தொழில் கூடங்களைப் பாதுகாத்து, தொழிலாளர்கள் நலனை உறுதி செய்ய வேண்டும்

சிறு தொழில் கூடங்களைப் பாதுகாத்து,  தொழிலாளர்கள் நலனை உறுதி செய்ய வேண்டும்

பெ.சண்முகம் வலியுறுத்தல்

பெ.சண்முகம் வலியுறுத்தல் நாமக்கல், அக்.12- தமிழ்நாட்டில் சிறு தொழில்  கூடங்கள் மூடப்பட்டு வேலை வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில், அந்நிய முதலீடுகளுடன் உள்நாட்டு தொழில்களையும் மேம்படுத்த திட்டமிட்ட முயற்சி களை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். நாமக்கல்லில் ஞாயிறன்று நடைபெற்ற மாவட்ட  சிறப்பு மாநாட்டில் பங்கேற்ற அவர், செய்தியாளர் களைச் சந்தித்து கூறியதாவது: கந்துவட்டி கொடுமையும் உறுப்பு விற்பனை அவலமும் நாமக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமை யால் உடல் உறுப்புகளை விற்கும் அவல நிலை  உள்ளது. விசைத்தறி தொழிலைப் பாதுகாத்து தொழி லாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்க அரசு முன்வர வேண்டும். உறுப்புகளை இழந்தவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் அவசியம். சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட கந்துவட்டி தொடர் பான சட்டத்தை அலுவலர்கள் கறாராக நடை முறைப்படுத்த வேண்டும். பழங்குடியினருக்கு வன உரிமையும் பட்டாவும் கொல்லிமலையில் பழங்குடியின மக்கள் நிலங்களை விற்று கூலி வேலைக்குச் செல்கின்ற னர். நிலங்களை மறு அளவீடு செய்ய வேண்டும். வன  உரிமை சட்டம் 2006 முழுமையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை. பல இடங்களில் வன உரிமைக்  குழுவே அமைக்கப்படவில்லை. பழங்குடி மக்க ளுக்கு பட்டா வழங்கக் கூடாது என்ற 1989-ஆம்  ஆண்டு தடை ஆணையை ரத்து செய்து மலை வாழ் மக்களுக்கும் பட்டா வழங்க வேண்டும். மேட்டூர் உபரி நீரை திருப்பிவிட வேண்டும் மேட்டூர் அணை இந்த ஆண்டு 6 முறை நிரம்பி யுள்ளது. உபரி நீரை திருமணி முத்தாற்றில் கொண்டு  சேர்த்தால் ஏரி, குளங்கள் பயன் பெறும். இது 25  ஆண்டுகளாக மக்களின் கோரிக்கையாக உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீட்டை அரசு செய்ய வேண்டும். அதிமுக-தவெக கூட்டணி சாத்தியமா? அதிமுக-பாஜக கூட்டணி ஏற்கனவே கொள்கை முடிவாக ஏற்கப்பட்ட நிலையில், பாஜகவை கொள்கை  எதிரியாக விஜய் கூறியுள்ளபோது எப்படி கூட்டணி சாத்தியமாகும்? தவெக தரப்பிலிருந்து தகவல் வெளி வராத நிலையில், எடப்பாடி பழனிசாமி தன் விருப் பத்தை வெளிப்படுத்துகிறார். தெரு பெயர்களில் சாதி பெயர்கள் நீக்கம் வர வேற்கத்தக்கது. ஆனால் முத்துராமலிங்கத் தேவர், நம்பூதிரிபாட் போன்ற மூத்த தலைவர்களின் பெயர் களில் இருந்து எடுக்க இயலாது. சிறுநீரக திருட்டு சம்பவங்கள் எந்தக் காலத்தில் நடைபெற்றாலும் விசா ரணைக்குட்படுத்தி ஆளுங்கட்சியினர் உட்பட அனை வரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித்தார்.