கால் நூற்றாண்டு காலமாக நடைபெறாமல் இருக்கும் மாணவர் பேரவைத் தேர்தலை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் உடனடியாக நடத்துமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாநிலந் தழுவிய கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. இதனை தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் மாநிலச் செயலாளர் ஜி. அரவிந்தசாமி புதனன்று (நவ.20) துவக்கி வைத்தார்.