tamilnadu

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு திண்டுக்கல் ஜோதி முருகன் ஜாமீன் மனுவை ரத்து செய்க! சமூக விரோதி தெய்வநாதனை கைது செய்க!

சென்னை,டிச.8- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா,  மாநிலப் பொதுச்செய லாளர்  பி. சுகந்தி ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம்பட்டியில் செயல்பட்டு வரும்  சுரபி செவிலியர் பயிற்சி கல்லூரியின் தாளாளர் ஜோதி முருகன் அங்கு பயிலும் பல மாணவிகளுக்கு பாலியல்  தொல்லை கொடுத்து வந்தது தொடர் பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கை பதிவு செய்த காவல்துறை போக்சோ உள்ளிட்ட 14 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜோதி முருகன் சிறையில் அடைக்கப்பட்டுள் ளார். இந்நிலையில் ஒரு வார காலத்தில் ஜோதிமுருகன் ஜாமீனில் வெளி வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  ஜோதிமுருகன் பாதிக்கப் பட்ட மாணவிகளுக்கு அச்சுறுத்தலை கொடுப்பதற்கும்  சாட்சியத்தை கலைத்து வழக்கை திசை திருப்பவும் வாய்ப்புள்ளது என்ற மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. 

எனவே உடனடியாக ஜோதிமுரு கன் ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக திண்டுக்கல் நீதி மன்றத்தின் முன்பாக  ஜனநாயக முறைப் படி அமைதியாக போராட்டத்தில் ஈடு பட்டனர். போராட்டத்தின்போது சமூக விரோதி தெய்வநாதன் திடீரென உள்ளே  நுழைந்து ‘பல பகுதிகளில் பெண்கள்  மீதான வன்முறைகள் நடைபெறு கிறது. அங்கெல்லாம் உங்களுடைய போராட்டத்தை ஏன் நடத்தவில்லை. எதற்காக,  ஏன் போராடுகிறீர்கள்’ என்று  மோசமான வார்த்தைகளால் அவதூறா கப் பேசி தகராறு செய்துள்ளார். இதை அங்கிருந்த பொதுமக்கள் அனை வரும்  அறிவார்கள். ஜனநாயக மாதர்  சங்கத்தின் மாநிலத் துணைத் தலை வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பின ருமான கே.பாலபாரதி, சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராணி, மாவட்ட தலைவர் ஜானகி ,மாநிலக்குழு உறுப்பினர் வனஜா உள்ளிட்டவர்கள் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ள்ளனர். அனைவரையும் மிக மோச மாக அவதூறாக பேசி அவமானப் படுத்தும் நோக்கத்தோடு  பேசியதை மாநிலக் குழு சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்.  பெண்களின் உரிமைக்காக போராடக் கூடிய ஜனநாயக மாதர்  சங்கத்தின் தலைவர்களை அவதூறாக பேசிய சமூக விரோதி தெய்வநாதனை உடனடியாக கைது செய்யவேண்டும். சுரபி கல்லூரி தாளாளர் ஜோதி முரு கனின்  ஜாமீன் மனுவை உடனடியாக ரத்து செய்து மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

;