tamilnadu

img

விவசாயத்தொழிலாளர் சங்க மூத்த தலைவர் சுனீத் சோப்ரா படம் திறப்பு

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலாளரும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் மக்களின் நல்வாழ்விற்காக போராட தனது வாழ்நாளையே அர்ப்பணித்த மூத்த தலைவர் தோழர் சுனீத் சோப்ரா அவர்களின் படத்திறப்பு மதுரையில் ஏப்ரல் 23 அன்று நடைபெற்றது. சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் ஜெ. காசி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர் படத்தை திறந்து வைத்து,உரையாற்றினார்.  மாநிலக்குழு உறுப்பினர் கே அருள்செல்வன் மாவட்டச் செயலாளர் வி. உமா மகேஸ்வரன், மாவட்ட பொருளாளர் பி ஆறுமுகம், மாவட்டத் துணைச் செயலாளர்கள் சொ. பாண்டியன்.கெளசல்யா மற்றும் பலர் பங்கேற்றனர்.