கிருஷ்ணராயபுரத்தில் சேகுவாரா சிஐடியு ஆட்டோ சங்கம் துவக்கம்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில், சிஐடியு சங்கத்தின் சார்பில் புதிய ஆட்டோ சங்கம் துவக்கப்பட்டது. துவக்க விழாவிற்கு சங்கத்தின் கிளைத் தலைவர் எஸ்.நந்தகுமார் தலைமை வகித்தார். ஆட்டோ சங்க பெயர்ப் பலகையை கரூர் மாவட்ட ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் ப. சரவணன் திறந்து வைத்துப் பேசினார். உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம். சுப்பிரமணியன், சங்கத்தின் ஆலோசகர் கே. சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கிளைச் செயலாளர் கே கமலக்கண்ணன் வரவேற்றுப் பேசினார். கிளை உறுப்பினர்கள் ஜி. கண்ணன், என். சண்முகவேல், வி. ஹரி கிருஷ்ணன், வி. விக்னேஸ்வரன், பிரகாஷ், பாரத், கோபி ஆகியோர் கலந்து கொண்டனர். கிளை பொருளாளர் ஆர்.சதீஷ்குமார் நன்றி கூறினார்.