tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து

https://www.facebook.com/ComradeSRY/ 
https://twitter.com/SitaramYechury

காந்திஜி கேட்டுக்கொண்டதன் பேரில்தான் சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதினார் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகிறார். இமாலய பொய்.

இத்தகைய பொய்கள் திசைதிருப்ப முடியாது. உண்மை என்னவெனில் விடுதலை போராட்டத்தில்  ஆர்.எஸ்.எஸ். துரும்பை கூட அசைத்தது கிடையாது. பல சமயங்களில் ஆர்.எஸ்.எஸ். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தினருடன் கூடிக் குலாவியது.

 

கைதி சவார்க்கரின் மன்னிப்பு கடிதம்; (கைதி எண்:  32778). “எனவே பெரும் கருணையும் பன்முக நன்மையும் எண்ணும் மாட்சிமை தாங்கிய (பிரிட்டிஷ்) அரசாங்கம் என்னை விடுதலை செய்தால் ஆங்கிலேய அரசுக்கும் அந்த அரசின் சட்ட திட்டங்களை முன்னேற்றுவதிலும் மிகவும் வலிமையான உறுதியான ஆதரவாளனாக இருப்பேன் என்பதை கூறிக்கொள்கிறேன்” மன்னிப்புக்கு புதிய இலக்கணம்!

பீகாரில் கிழக்கு சாம்ப்ரான்/ஜஹானாபாத்/கிஷன்கஞ்ஜ் போன்ற பல இடங்களில் சமையல் வாயு உருளை விலை  ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. இந்த பண்டிகை காலத்தில் உழைப்பாளி குடும்பங்களுக்கு மோடி அரசாங்கத்தின் பரிசு! தேசிய அளவில் எதிர்ப்பை வலுவாக்குவோம்.

பெருந்தொற்று காலத்தில் ஊழியர்களுக்கு ஊதிய வெட்டு. ஆனால் உயர் அதிகாரிகளுக்கும் முதன்மை அதிகாரிக்கும் அபரிமித உயர்வு. கோடிக்கணக்கான உழைப்பாளிகளின் வாழ்வு படுபாதாளத்தில்! மோடியின் கொள்கைகள் வருமானத்தில் இடைவெளியை அதிகரித்து கொண்டுள்ளது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகின்றனர். இதன் விளைவாக மக்களின் வாங்கும் சக்தி வீழ்ச்சி அடைகிறது. பொருளாதார மந்தம் ஆழமாகிறது.   பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நேரடி நிதி உதவி வழங்குக! வாழ்வாதாரத்தை மட்டுமல்ல; பொருளாதாரத்தை பாதுகாக்கவும் இது அவசியம்!

தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் அருண் குமார் மிஸ்ரா காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் அமைதிக்கான புதிய சகாப்தத்தை அமித்ஷா உருவாக்கியுள்ளார் என பாராட்டியுள்ளார். ஐ,நா.சபை சாசனப்படி அடிப்படை மனித உரிமைகளை பாதுகாப்பதில் தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். மனித உரிமைக்கான ஐ,நா.சபை சாசனம் உருவாக்கியதில் இந்தியாவும் ஒரு முக்கிய தேசம்.   ஆள்வோருக்கு தாள் பணிந்து பிரச்சாரம் செய்வதை கைவிட்டு மனித உரிமைகளின் மோசமான மீறல்களை அங்கீகரிப்பதை நிறுத்துங்கள்.

2014ம் ஆண்டு மோடி பிரதமரான பொழுது பட்டினிக் குறியீடு பட்டியலில் இந்தியா 55வது இடத்தில் இருந்தது.  2020ல் 94வது இடத்துக்கு சரிவு! 2021ல் 116 தேசங்கள் கொண்ட பட்டியலில் 101வது இடம். வெட்கக்கேடு! லட்சக்கணக்கான டன் உணவு தானியங்கள் மத்திய கிடங்குகளில் அழுகி கொண்டுள்ளன. ஆனால் தேசத்தின் மக்கள் பசி கொடுமையில்! பசியில் உள்ள அனைவருக்கும் உணவு தானியங்களை உடனடியாக கொடுங்கள்.

இதுவரை இல்லாத அளவு பெட்ரோலிய பொருட்கள் விலை மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்வாதாரம் மீது மீண்டும் தாக்குதல். தினசரி உயர்வு மூலம் பணவீக்கம் அதிகரிப்பு! மக்களின் வாழ்வாதாரம் கட்டமைக்கும் திறன் வீழ்ச்சி! பசி/பட்டினி அதிகரிப்பு!  பெட்ரோலிய பொருட்கள் மீதான மத்திய வரிகளை உடனடியாக திரும்பப்பெறுங்கள்! தேவையானவர்களுக்கு நேரடி நிதி உதவியும் இலவச உணவு தானியங்களையும் தாருங்கள்.


 

;