புதுச்சேரி, மார்ச் 13- அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும் என்று புதுச் சேரி பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது. புதுச்சேரி யில் நிதிபொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி திங்கள்கிழமை 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதன் விவரம் வருமாறு:- 2023-2024 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடு ரூ.11,600 கோடி என நிர்ணயிக்கப்பட் டுள்ளது. சொந்த வருவாய் வரவி னங்கள் ரூ.6,154.54 கோடியாகும். 7வது ஊதியக்குழு பரிந்துரை அமல் தொகுதி வளர்ச்சி நிதியாக அனைத்து எம்எல்ஏக்களுக்கும் ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்று பவர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும். புதுச்சேரி துறைமுகத்தில் சிறிய கப்பல்களை பழுதுநீக்கும் பணிகள் மீண்டும் மேற்கொள் ளப்படும். வணிக ரீதியில் சரக்கு களை கையாள வசதிகள் மேம் படுத்தப்படும். மீன்பிடி துறை முக கடற்தளத்துக்கு அருகே மணல் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும். கலங்கள் எந்நேரமும் செல்ல வழிகாட்டு கருவி அமைக்கப்படும்.
பொது இடங்களில் துணி பை வழங்கும் இயந்திரங்கள், பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கி மறு சுழற்சிக்கு வழி செய்யும் இயந்திரங்கள் பொது இடங்களில் நிறுவப்படும். நொறுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் சாலைகள் அமைக்கப் பயன்படுத்தப்படும். புதுச்சேரி, காரைக்காலில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த கோயில்கள், சுற்றுலா பயணி களை கவரும் வகையில் மேம்ப டுத்தப்படும். மணப்பட்டு கிராமத்தில் 100 ஏக்கரில் தீம் பார்க், ஓய்வுவிடுதி, சாகச விளையாட்டு கள் அடங்கிய சுற்றுலாத் திட்டங்கள் நிறுவப்படும். புதுச்சேரி சாலை போக்கு வரத்துக்கழகத்தால் இயக்கப் படும் உள்ளூர் பேருந்துகளில் அட்டவணையினப் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய லாம்.அம்பேத்கரின் பஞ்சரத் தான தலங்களில் இந்தியாவி லுள்ள நான்கு தலங்களுக்கு ஆண்டுதோறும் அட்டவணை யின மக்கள் யாத்திரை செல்ல நிதியுதவி தரப்படும். உயர்கல்வி படிக்கும் பார் வைத்திறன் குறைபாடு உள்ள 50 மாற்றுத்திறனாளி மாணவர்க ளுக்கு ரூ.25 லட்சத்தில் இலவச மடிகணினிகள் தரப்படும். சிலிண்டருக்கு மானியம் அனைத்து ரேசன் அட்டை தாரர்களும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.300 வீதம் ஆண்டுக்கு மொத்தம் 12 சிலிண்டருக்கு மானியம் தரப்படும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ. 126 கோடி செலவாகும்.