tamilnadu

உலகச் செய்திகள்

சர்வதேச விமான சேவையை மீண்டும் துவங்கு வது குறித்த வியட்நாமின் முன்மொழிவுக ளுக்கு அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள் ளன. சீனா, தாய்லாந்து மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளிடமிருந்து விரைவில் ஒப்புதல் வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். சில நாடுகள் முன்மொழிவில் உள்ள சில அம்சங்கள் குறித்துத் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். டிசம்பர் 17 அன்று இந்த முன் மொழிவை வியட்நாம் அனைத்து நாடுகளுக்கும் அனுப்பியிருந்தது.

மூன்று கருவிகளைக் கொண்ட ஒரு செயற்கைக் கோளை ஈரான் ஏவியிருக்கிறது. பூமியின் வட்ட பாதையை அந்த செயற்கைக்கோள் சென்றடைந்து விட்டதா என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இது வரையில் வெளியாகவில்லை. ஆனால், ஆய்வுக்கான கருவிகள் பொருத்தப்பட்ட செயற்கைக்கோளை ராக்கெட் மூலம் வெற்றிகரமாக செலுத்திவிட்டோம் என்று அரசின் தொலைக்காட்சி செய்தி தெரிவிக்கிறது.

மார்ச் 2021ல் நெதர்லாந்து நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தாலும், இதுவரை யில் எந்தக்கட்சி அல்லது கூட்டணியாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. 150 இடங்கள் உள்ள நாடாளு மன்றத்தில் அதிகபட்சமாகவே 34 இடங்களை மட்டுமே பெற்று மக்கள் கட்சி முதலிடத்தைப் பிடித்துள்ளது. பெரும்பான்மைக்கு 76 இடங்கள் தேவையாகும். கட்சிக ளுக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஜனவரி 10 ஆம் தேதியன்று புதிய அரசு அமைக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.