tamilnadu

img

பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி மாநகராட்சித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, மே 13- தூய்மைப் பணியாளர்களுக்கு பாது காப்பு உபகரணங்களான முகக் கவசம், கையுறை, சானிடைசர் முறையாக வழங்க வேண்டும், மாநகராட்சித் தொழி லாளர்களுக்கு கொரோனா பேரிடர் கால ஊக்கத் தொகை வழங்க வேண்டும். கொரோனா நோய்த்தடுப்பு பணிக்காலத் தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதி வழங்கவேண்டுமென வலியுறுத்தி மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் மதுரை மாநகராட்சி வார்டு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது  வடக்கு மண்டலம் அலுவலகத்திற்கு உட்பட்ட 37,38-ஆவது (செல்லூர்) வார்டு அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் கே. மீனாடசிசுந்தரம் தலைமை வகித்தார்.

மாவட்ட நிர்வாகி கள் பாண்டியம்மாள், சந்திராஆறுமுகம், வீரன், முருகன், பாலா,வைரமணி, பாக்கி யம் ஆகியோர் கலந்துகொண்டனர்.  மேற்கு மண்டலம் (8,9-ஆவது வார்டுகள்) அருள்தாஸ்புரத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் விஜயன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் முருகன், ரவி, பரமசிவம், மாடசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். தெற்கு மண்டலம் (87,89-ஆவது வார்டுகள்) சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட உதவித் தலைவர் கே.கருப்பசாமி தலைமை வகித்தார். கன்னிப்பன், சுப்பிரமணி, பால்பாண்டி, கருப்பையா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.

;