கண்மாய்கள் சீரமைக்கும் பணி துணை முதல்வர் ஆய்வு
தேனி, ஜூன் 1- போடி அருகே பி.மீனாட்சிபுரம் கண்மாயில் பொதுப் பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) சார்பில் குடி மராமத்து திட்டத்தின் கீழ் சீரமைக்கும் பணிகளை தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-குடிமராமத்து திட்டத்தின் கீழ் பி.மீனாட்சிபுரம் கண்மாயில் ரூ.89 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் புனரமைக் கும் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இக்கண்மாய்கள் மூலம் பாசனம் பெறும் 183.64 ஹெக்டேர் பாசன பரப்பு உறுதிசெய்யப்படுவதுடன், மறைமுகமாக 80 கிணறுகள் மற்றும் 120 போர்வெல் கள் மூலம் சுமார் 350 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். இக்கண்மாயை சுற்றியுள்ள விசுவாசபுரம், பத்ர காளிபுரம், பி.அம்மாபட்டி, பி.மீனாட்சிபுரம் கிராமங்கள் குடிநீர் வசதி பெறுவதுடன், இப்பணிகள் மேற்கொள்வ தன் மூலம் கால்வாயில் தண்ணீர் தங்குதடையின்றி சென்று கண்மாயை விரைந்து அடையும் என துணை முதல்வர் தெரிவித்தார் . ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட ஊராட்சித்தலைவர் தி.பிரிதா மற்றும் பொதுப் பணித்துறை பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.
ரேஷன் முறைகேட்டைக் கண்டித்து நாளை போராட்டம்: சிபிஎம் அறிவிப்பு
மதுரை, ஜூன் 1- ரேஷன் கடைகளில் மத்திய - மாநில அரசு கள் அறிவித்துள்ள அடிப்படையில் அரிசி, சர்க்கரை, பச்சரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய் முழுமையாக வழங்க வேண்டும். வழங்கப்படும் பொருட்கள் சுத்தமாக, தரமாக, எடை குறையாமல் வழங்க வேண்டும். பொருட்கள் வழங்குவதில் ஏற்படும் குறைபாடு கள், குளறுபடிகளை களைந்திட அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதனன்று செல்லூர், மீனாம்பாள்புரம், புதூர் - அண்ணாநகர், மத்திய பகுதிக் குழு, மேலப்பொன்னகரம் பகுதிக்குழு, அரசரடி பகுதிகுழு, பழங்காநத்தம் பகுதிகுழு, ஜெய்ஹிந்த்புரம் பகுதிக்குழு, தெற்குவாசல், முனிச்சாலை பகுதிக்குழுக்கள் சார்பில் மொத்தம் 70 மையங்களில் கண்டன இயக்கம் நடைபெற உள்ளது. கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், பகுதிக் குழு செயலாளர்கள், பகுதிகுழு உறுப்பி னர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பி னர்கள் பங்கேற்க உள்ளனர்.
நிலம் வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி
விருதுநகர், ஜூன்.1- சிவகாசியில் நிலம் வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் அட்வான்ஸ் தொகை வாங்கிக் கொண்டு ஏமாற்றி வரும் நான்கு பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரி டம் பாதிக்கப்பட்டவர் புகார் மனு அளித்துள்ளார். சிவகாசி அருகே திருமேனி நகரைச் சேர்நத ஆறு முகம் மகன் ராமர். இவரிடம் நிலம் வாங்கித் தருவ தாக அழகர்ராஜ், பெருமாள்சாமி, புரோக்கர்கள் முருகன், செல்வம் ஆகியோர் ரூ.10 லட்சம் முன் பணம் பெற்றார்களாம். நிலத்தையும் வாங்கித் தர வில்லை. முன் பணத்தையும் திரும்பத்தரவில்லை. எனவே, இராமர், கடந்த 2019 ஆக. 19 ல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித் துள்ளார். இதையடுத்து, சிவகாசி கிழககு காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்று பிரச்சனை யை தீர்க்க அப்போதைய மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் அங்கு சென்றுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களும் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர். பின்பு, 2020 மே 29 அன்று பணத்தை திரும்பத் தருவதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒப்புக் கொண்டதாக கூறப்படு கிறது. ஆனால், அந்த நாளில் அங்கு ஆஜராக வில்லையாம். எனவே, பாதிக்கப்பட்ட ராமர், தனது பணத்தை மீட்டுத் தருவதோடு ஏமாற்றிய நான்கு பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திங்களன்று புகார் மனு அளித்தார்.
வழக்கறிஞர் சம்சுதீன் காலமானார்
இராமநாதபுரம், ஜூன் 1- மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தோழர் வழக்கறிஞர் எம்.சம்சுதீன் (66) உடல்நலக் குறை வால் திங்களன்று காலமானார் எம்.சம்சுதீன் வழக்கறிஞர் பணியை தொடங்கிய போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். கட்சியின் தாலுகா குழு உறுப்பினர், மாவட்டக்குழு உறுப்பினர், இராமநாதபுரம் நகர் செயலாளர் பொறுப்புகளை வகித்துள்ளார். எம்.சம்சுதீன் மறைவிற்கு மாநி லச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ. லாசர் கே.கனகராஜ், எம்.என்.எஸ். வெங்கட்டராமன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.ஏ.பெருமாள், கே.பாலபாரதி, எஸ் பாலசுப்பிர மணியன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டச் செய லாளர் காசிநாததுரை, மாவட்டச் செயற்குழ உறுப்பினர்கள் என்.கலையரசன், சிபிஐ மாவட்டச் செய லாளர் முருகபூபதி உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.